டிச.2ம் தேதி கல்லூரிகள் திறப்பு – உயர்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம்!

டிச.2ம் தேதி கல்லூரிகள் திறப்பு – உயர்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம்!

முதுநிலை 2-ம் ஆண்டு அறிவியல், தொழில்நுட்பப் பிரிவு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

டிச.2ம் தேதி கல்லூரிகள் திறப்பு – உயர்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம்!

கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருக்கும் நிலையில், இறுதியாண்டு மாணவர்களுக்கு டிச.2ம் தேதி பள்ளிகளை திறக்க AICTE அறிவுறுத்தியுள்ளது. அதற்கான வேலைகளும் நடைபெற்று வந்தது. ஆனால், தமிழகத்தில் நிவர் புயல் ஒரு சில மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியதால் திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படுமா/ என்ற கேள்வி எழுந்தது.

டிச.2ம் தேதி கல்லூரிகள் திறப்பு – உயர்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம்!

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், ‘முதுநிலை 2ம் ஆண்டு அறிவியல், பொறியியல், தொழில்நுட்பப் பிரிவு மாணவர்களுக்கு 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும். மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகளை ஆன்லைனில் நடத்த முடியாது என்பதால் கல்லூரிகளை திறக்க முடிவெடுக்கப்பட்டது. கொரோனா குறித்து மாணவர்கள் அச்சம் கொள்ள வேண்டாம்’ என தெரிவித்தார். மேலும் நிவர் புயலை அரசு சிறப்பாக கையாண்டதாக கூறிய அவர், அதி கனமழை பெய்தால் கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறினார்.