பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21க்கு உயர்த்துவது குறித்து பரிசீலனை : எம்பி கனிமொழி வரவேற்பு!

பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21க்கு உயர்த்துவது குறித்து பரிசீலனை : எம்பி கனிமொழி வரவேற்பு!

74வது சுதந்திர தினத்தையொட்டி நேற்று டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்த பிரதமர் மோடி அதன்பின் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21க்கு உயர்த்துவது குறித்து பரிசீலனை : எம்பி கனிமொழி வரவேற்பு!

அப்போது பேசிய அவர் இளம் வயதில் பெண்கள் திருமணம் செய்து கொள்வதால் அவர்கள் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பதாகவும் அதனால் பெண்களுக்கான சரியான திருமண வயதை தீர்மானிப்பதற்கான ஒரு குழுவை பணியமர்த்தி உள்ளோம் என்றும் விரைவில் அந்த குழுவின் அறிக்கையை பொறுத்து பெண்ணின் திருமண வயது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அறிவித்தார். பிரதமரின் இந்த முடிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில், “பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21க்கு உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது என்ற பிரதமரின் அறிவிப்பு வரவேற்கதக்கது. இந்த நேரத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தையும் மேலும் தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றும் பதிவிட்டுள்ளார்.