“ஏழை, எளிய மக்களின் நலன் கருதியே மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டது”- அமைச்சர் கே.சி.வீரமணி

“ஏழை, எளிய மக்களின் நலன் கருதியே மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டது”- அமைச்சர் கே.சி.வீரமணி

திருப்பத்தூர்

தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் மருத்துவ வசதிபெற வேண்டும் என்பதற்காகவே அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டு இருப்பதாக, வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார். திருப்பத்தூர் மாவட்டம் தோக்கியம், சந்திரபுரம் உள்ளிட்ட 6 இடங்களில், அம்மா மினி கிளினிக்குகளின் சேவையை தொடங்கிவைத்து பேசிய அவர், இதனை தெரிவித்தார்.

“ஏழை, எளிய மக்களின் நலன் கருதியே மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டது”- அமைச்சர் கே.சி.வீரமணி

மேலும், தமிழக அரசு மருத்துவத்துறையில் பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார். தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 5 லட்சம் ரூபாய் வரை சிகிச்சை பெறும் வகையில் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதால், இதய நோயாளிகள் உள்பட ஏராளமானோர் பயனடைந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கியதன் மூலம் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் இனி வரும் காலங்களில், மருத்துவராகும் நிலை உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“ஏழை, எளிய மக்களின் நலன் கருதியே மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டது”- அமைச்சர் கே.சி.வீரமணி

முன்னதாக திருப்பத்தூரில் மின்சிக்கன வாரத்தை முன்னிட்டு நடந்த விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் கே.சி.வீரமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தூய நெஞ்சக் கல்லூரியில் இருந்து காந்தி சிலை வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் நடந்த இந்த பேரணியில், நூற்றுக்கும் மேற்பட்ட மின்துறை ஊழியர்கள் பதாகைகளை ஏந்தியபடி கலந்துகொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.