பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி.. நாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்கிறது..

பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி.. நாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்கிறது..

பெட்ரோல் மற்றும் டீசல் விலை எதிரொலியாக மத்திய பிரதேசத்தில் நாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.12 உயருகிறது. ஆக, எரிபொருள் விலை உயர்வு சாமானிய மக்களின் தலையில் இடியாக விழ தொடங்கியுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதால், மத்திய பிரதேசத்தில் ரத்லம் பகுதியை சுற்றியுள்ள 25 கிராமத்தை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் பால் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்த முடிவு செய்துள்ளனர். இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனால் ரத்லம் நகரில் நாளை முதல் ஒரு லிட்டர் பால் ரூ.55ஆக உயருகிறது. தற்போது அந்நகரில் ஒரு லிட்டர் பால் ரூ.43க்கு விற்பனையாகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி.. நாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்கிறது..
பசுக்கள்

இது தொடர்பாக பால் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் போக்குவரத்து கட்டணம் அதிகரித்து விட்டது. மேலும் கால்நடை தீவனங்களின் விலையும் அதிகமாக உள்ளது. பால் விலை உயர்வை வர்த்தகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலம் சப்ளையை நிறுத்தி விடுவோம். கொரேனா வைரஸ் காலத்துக்கு முன்னால் கூட பால் விலையை உயர்த்த நாங்கள் உயர்த்த முடிவு செய்தோம். ஆனால் வர்த்தகர்களுடன் ஒப்பந்தம் ஏற்படவில்லை.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி.. நாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்கிறது..
பால் கறவையாளர்

அதன் பிறகு பால் விலையை லிட்டருக்கு ரூ.2 அதிகரிக்க பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக விலை உயர்த்தப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். தற்போதைக்கு இந்த ஒரு நகரத்தில் மட்டும்தான் பால் விலை உயரப்போகிறது. அதேவேளையில் இதன் தாக்கம் நாட்டின் மற்ற பகுதிகளிலும் மெல்ல எதிரொலிக்க தொடங்கும். எரிபொருள் விலை உயர்வால் கடைசியில் நுகர்வோர்தான் பாதிக்கப்படுவர்.