ஹலோ..நான்தான் பேசுகிறேன்..! – நள்ளிரவு போன் கால்கள்; அதிர்ச்சியில் பெண்கள்

 

ஹலோ..நான்தான் பேசுகிறேன்..! – நள்ளிரவு போன் கால்கள்; அதிர்ச்சியில் பெண்கள்

சென்னை அம்பத்தூர் பகுதியில் குடியிருக்கும் பெண்களில் சிலருக்கு வரும் போன் அழைப்புகளால் அவர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

சென்னையில் கொரோனா ஊரடங்கிலும் சைபர் தாக்குதலால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வீட்டுக்குள்ளே மக்கள் முடங்கியிருந்தாலும் போன் வழியாக நள்ளிரவில் தொல்லைகளை பெண்கள் சந்தித்து வருகின்றனர். சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண்களுக்கு அடிக்கடி போன் கால்கள் வந்துள்ளன. எதிர்முனையில் பேசியவர்கள் தப்பு, தப்பாக பேச, மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீஸாரிடம் புகார்களை ஆன் லைனில் கொடுத்துள்ளனர்.

ஹலோ..நான்தான் பேசுகிறேன்..! – நள்ளிரவு போன் கால்கள்; அதிர்ச்சியில் பெண்கள்

அந்தப்புகாரில் எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். நான் ஃபேஸ்புக்கில் ஆக்ட்டிவ்வாக இருப்பேன். கடந்த மாதம் நள்ளிரவு 12 மணியளவில் எனக்கு ஒரு போன் வந்தது. ஹலோ என்று கூறியதும் எதிர்முனையில் ஹலோ என ஆண்குரல் கேட்டது. உடனே நான் நீங்க யாரு என்று கேட்டதும் என் பெயரைக் அந்த நபர் கூறினார், உடனே நான் தான் பேசுகிறேன் நீங்கள் யாரு என்று கேட்டேன். அதற்கு அந்த நபர் நான் யாரென்று தெரிந்து கொள்வதைவிட உங்களுக்கு எவ்வளவு வேண்டும் என்று கேட்டார். அவர் கூறியது எனக்கு புரியவில்லை.
உடனே நான், நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், ஏன் பக்கத்தில் யாரும் இருக்கிறார்களா என்று கேட்டார். அதற்கு நான், மிஸ்டர் நீங்க யாரு, ஏன் தேவையில்லாமல் பேசுகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், நான் ஒன்றும் தப்பா பேசவில்லை. நீங்கள்தான் ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்தீர்கள் என்று கூறினார். அதைக்கேட்டதும் நான் எதுவும் பதிவு செய்யவில்லை என்று கூறினேன். பிறகு போன் இணைப்பை துண்டித்துவிட்டு ஃபேஸ்புக்கைப் பார்த்தேன். அப்போதுதான் என்னுடைய ஃபேஸ்புக்கில் மார்பிங் செய்யப்பட்ட போட்டோஸ்களோடு செல்போன் நம்பரும் இருந்தது. அதைப்பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இவரைப் போல இன்னும் சிலஅம்பத்ரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீஸாரிடம் புகாரளித்துள்ளனர். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹலோ..நான்தான் பேசுகிறேன்..! – நள்ளிரவு போன் கால்கள்; அதிர்ச்சியில் பெண்கள்

இதுகுறித்து பெண்கள் மற்றும் குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் கேட்டதற்கு அம்பத்தூர் பகுதியில் குறிப்பிட்ட சிலரின் ஃபேஸ்புக் மற்றும் அவர்களுக்கே தெரியாமல் போலி ஃபேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அதில், சம்பந்தப்பட்ட பெண்களின் போன் நம்பர், அவர்களின் மார்பிங் ஆபாச போட்டோஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. கால் கேர்ள்ஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதைப்பார்ப்பவர்கள் போனில் தொடர்பு கொண்டு தொல்லைக் கொடுத்துள்ளனர்.
போன் செய்தவர்கள் குறித்து விசாரரண நடத்தி வருகிறோம். மேலும் இந்தப் பெண்களின் போன் நம்பர், போட்டோஸ் சைபர் மோசடி கும்பலுக்கு எப்படி கிடைத்தது என்று விசாரித்துவருகிறோம். இதற்காக சைபர் க்ரைம் போலீஸாரிடம் உதவியை நாடியுள்ளோம். சம்பந்தப்பட்ட பெண்களின் ஃபேஸ்புக், ஐடி-க்களங எப்படி ஹேக் செய்யப்பட்டது என்று விசாரணை நடந்து வருகிறது. மேலும், போலி ஃபேஸ் புக் ஐடி எந்த ஐபி அட்ரஸில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது என்றும் விசாரணை நடந்துக் கொண்டிருக்கிறது.

இதற்கு பின்னணியில் பெரிய நெட்வோர்க் இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். ஊரடங்கில் மக்கள் வீடுகளிலேயே முடங்கியிருக்கும் சூழலில் இதுபோன்ற இணையதள குற்றங்களும் குடும்ப வன்முறைகளும் வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. சைக்கோ மனம்படைத்தவர்கள்தான் இதுபோன்ற சைபர் க்ரைம் குற்றங்களை செய்துவருகின்றனர். பழிவாங்கவும் இதுபோன்று குடும்ப பெண்களை கேவலமாக சித்தரித்து சமூகவலைதளங்களில் பதிவு செய்யும் கும்பல் உள்ளது. அந்தக் கும்பல் குறித்த விவரங்களைச் சேகரித்து வருகிறோம். விரைவில் பெண்களை தவறாக சித்தரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது புகார் கொடுத்தவர்களில் சிலர் மனதளவிலும் குடும்பத்திலும் சொல்ல முடியாத பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான கவுன்சலிங் அளித்துள்ளோம்” என்றனர்.

ஹலோ..நான்தான் பேசுகிறேன்..! – நள்ளிரவு போன் கால்கள்; அதிர்ச்சியில் பெண்கள்

இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் கூறுகையில், ஊரடங்கில் ஆன்லைன் பயன்பாடு அதிரித்துள்ளது. அதைப்போல ஆன்லைன் குற்றங்களும் அதிகரித்துள்ளது. ஆன்லைன் சீட்டிங் நடந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் பிரபலமான ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி சீட்டிங் நடந்துள்ளது. அந்த நிறுவனத்தின் பெயரில் முதலில் பெர்ஷனல் லோன் வேண்டுமா என்று முதலில் எஸ்எம்எஸ் வரும். அதில் ஒரு செல்போன் நம்பரும் இருக்கும். அந்த நம்பருக்கு போன் செய்தால் லோன் குறித்த விவரங்களைச் சொல்வார்கள். அதற்கு ஓகே என்று கூறினால் ஆவணங்களை வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்ப சொல்வார்கள். பின்னர் லோன் ப்ராசசிஸிங் கட்டணமாக குறிப்பிட்ட தொகையை வங்கி கணக்கில் செலுத்த சொல்வார்கள். அந்தப்பணத்தை செலுத்தியவுடன் கேட்ட லோன தொகை கிரெடிட் ஆனதாக எஸ்.எம்எஸ் வரும். ஆனால் அந்தத் தொகை வங்கி கணக்கில் வந்திருக்காது. அதுகுறித்து போன் செய்து கேட்டால் ஊரடங்கு காரணமாக சில தினங்களாகும் என்று பதில் சொல்வார்கள். அதன்பிறகு நீங்கள் தொடர்பு கொண்ட செல்போன் தொடர்பு எல்லைக்கு வெளியில் சென்றுவிடும். இதையடுத்து சம்மந்தப்பட்ட ஃபைனான்ஸ் நிறுவனத்தின் கிளைக்குச் சென்று விசரித்தால் உண்மை தெரிய வரும்.

Fake phone calls from “police” part of tax office scam | News Local

அதன்பிறகு ஊரடங்கு காலகட்டத்தில் கையில் வைத்திருந்த பணத்தையும் ஏமாந்தது தெரியவரும். இதுபோன்ற சைபர் குற்றங்கள் நடந்துக் கொண்டிருக்கிறது. இதுகுறித்த புகார்களின் பேரில் விசாரணை நடத்தி வருகிறோம். இதுதவிர கால் சென்டரிலிருந்து வரும் போன் அழைப்புகள் மூலமாகவும் சீட்டிங் நடந்துகொண்டிருக்கிறது. போலி கால்சென்டர் தொடர்பான புகார்களுக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகிறோம். புற்றீசல்போல போலி கால் சென்டர் மோசடி நெட்வோர்க் பின்னணியில் அரசியல் கட்சி நிர்வாகிகளும் உள்ளனர். அதனால் இதுபோன்ற போலி அழைப்புகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம். அதைப்போல பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களுக்கு தைரியமாக புகார் கொடுக்க வேண்டும் என்றனர்.

ஊரடங்கில் வீட்டிலிருப்பவர்கள் உஷாராக இருக்கவில்லையெனில் உள்ளதும் போய்விடும் என்பதை இந்தச் சம்பவங்கள் உணர்த்துகின்றன!

-எஸ்.செல்வம்