• March
    29
    Sunday

Main Area

Main



இலங்கை ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் அயிட்டம் 'மிதிவெடி'

mithivedi
mithivedi

இலங்கையில் வகைவகையான ஸ்நாக்ஸ் அயிட்டங்கள் உள்ளன. அதில் சிறப்பானவற்றில் மிதிவெடி முக்கியமானதாகும்.

தேவையான பொருட்கள்:


உருளைக்கிழங்கு- 500 கிராம்
பச்சை மிளகாய்- 2 
முட்டை- 6
தேங்காய்ப்பால்- கால் கப்
வெங்காயம்- 1
கறிவெப்பிலை-  சிறிதளவு
கடுகு- ஒரு தேக்கரண்டி
பெருஞ்சீரகம்- ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள்- 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள்- சிறிதளவு
இஞ்சி விழுது-  அரை தேக்கரண்டி
எலுமிச்சை சாறு- ஒரு மேஜைக்கரண்டி
பூண்டு- 2 பற்கள்
உப்பு- சுவைக்கேற்ப
ஸ்ப்ரிங் ரோல் ஷீட்கள்- 20 
ரஸ்க் தூள்- ஒரு கப்
எண்ணெய்- பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை: 


5 முட்டைகளை அவித்து ஓடு நீக்கி இரண்டாக வெட்டி வைக்கவும். கிழங்கை சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து தோலுரித்து துண்டுகளாக்கி வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை அரிந்து வைக்கவும், பூண்டை சிறிதாக நறுக்கி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும்.

ஓரளவு வதங்கியதும் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து தூள் வாசனை போக வதக்கி வேக விடவும்.

உருளைக்கிழங்குத் துண்டுகளை சேர்த்து அரைக்கப் தண்ணீர் ஊற்றி சில நிமிடங்கள் வேகவிட்டு பாலைச் சேர்க்கவும். இறுதியாக எலுமிச்சை சாறு சேர்த்துக் கலந்து மேலும் கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டை வெண்கருவை அடித்து வைக்கவும்.

அகலமான ஒரு தட்டில் ரஸ்க் தூளைப் பரப்பி வைக்கவும்.

இரண்டு ஸ்ப்ரிங் ரோல் ஷீட்டுகளை ஒன்றாக வைத்து அதன் நடுவே பாதிமுட்டையும் சிறிது கிழங்குக் கலவையை வைக்கவும்.

அதனை செவ்வகமாக மடித்து ஓரத்தில் அடித்து வைத்த முட்டையைத் தடவி ஒட்டி விடவும்.

பின்னர் அதை ஒவ்வொன்றாக முட்டையில் நனைத்து ரஸ்க் தூளில் புரட்டி எடுக்கவும்.

வாணலியில் ஒரு மேஜைக் கரண்டி எண்ணெய் விட்ட தயாராக உள்ள மிதிவெடிகளை மிதமான தீயில் எல்லா புரமும் திருப்பிப் போட்டு வேக விட்டு எடுக்கவும்.

மிதிவெடிகளை இரண்டிரண்டாகப் போட்டால் ஓரங்களை வேகவிடும்போது இடுக்கியால் பிடித்துக் கொள்ளாமல் ஒன்றையொன்று சார்ந்து இருப்பது போல வேக விடலாம்.

இவற்றில் எண்ணெய் அதிகம் சாராது. கிச்சன் பேப்பரில் வைத்தால் மீதி எண்ணெய்யை அது உறிஞ்சி விடும்.

சாஸ் அல்லது கெட்ச் அப்புடன் சூடாகப் பரிமாறவும்.

பொரிப்பதற்கு தட்டையான கரண்டியோடு கூடவே பெரிய இடுக்கி ஒன்றும் இருந்தால் வசதியாக இருக்கும். பொரிக்கும் சமயம் முதலில் பெரிய பக்கங்களிரண்டையும் வேகவிட்டுக் கொள்ளவும்.

அடுத்து நீளமான பக்கவாட்டையும் வேக விடவும். சிறிய பக்கங்களை ஒருமுறை பாத்திரத்தோடு அழுத்தித் தேய்த்தால் தட்டையாகி விடும்.

சமையலுக்கு நடுவே ஒவ்வொரு முறையும், பொரியல் சட்டியில் மீந்திருக்கும் எண்ணெய்யையும் ரஸ்க் தூள்களையும் துடைத்து எடுக்க வேண்டும்.

இதற்குத் தேவையான கிச்சன் பேப்பரும் ஒரு பாத்திரமும் வைத்துக் கொள்ளவும்.
ரோல் ஷீட்டுக்கு பதிலாக மைதா மாவுடன் சிறிதளவு உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்குக் கரைத்து தோசையாக வார்த்துப் பயன்படுத்தலாம்.

2018 TopTamilNews. All rights reserved.