• April
    09
    Thursday

Main Area

Main



ரயிலில் தூங்கிக் கொண்டிருந்த பெரியவர்.. திடீரென 'மிடில் பெர்த்' தலையில் விழுந்த அதிர்ச்சி !

dharmaraj
dharmaraj

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சிதம்பரம் அருகே ரயிலில் பயணித்த ஒரு பயணியின் கையில் ரயில் ஜன்னல் விழுந்ததில் அவரின் விரல் துண்டானது. அவருக்கு முதலுதவி அளிக்கக்கூட ரயிலில் யாரும் இல்லாததால் மயிலாடுதுறையில் ரயிலை நிறுத்தி அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதே போல, ரயிலில் சென்ற பயணி ஒருவரின் தலையில்  'மிடில் பெர்த்' விழுந்த சம்பவம் நடந்துள்ளது. 

ttn

தாம்பரத்திலிருந்து நேற்று இரவு நாகர்கோவில் விரைவு ரயில் புறப்பட்டது. அந்த ரயிலில் உள்ள  S10 பெட்டியில் தர்மராஜ் என்பவர் பயணித்துள்ளார். தர்மராஜ் இருந்த அந்த பேட்டி ஸ்லீப்பர் கோச். இவர் தனக்கான கீழ் பெர்த்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென, அவரின் தலையில் மிடில் பெர்த் கழன்று விழுந்துள்ளது.

ttn

சத்தம் கேட்டு எழுந்த சக பயணிகள், தர்மராஜை மீட்டுள்ளனர். அதன் பின்னர், அவருக்கு முதலுதவி கொடுக்க ரயிலில் இல்லாததால், மதுரை ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி அவருக்கு முதலுதவி அளிக்கப் பட்டது. வெகு தொலைவு செல்லும் விரைவு ரயில்களில் முதலுதவி பெட்டி வைக்க வேண்டும் என்றும் பயணிகளுக்கு ஆபத்து நேராத வகையில் ரயிலைப் பராமரிக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.  


 

2018 TopTamilNews. All rights reserved.