நிரந்தரமாக ரீடெயில் ஸ்டோர்களை மூடும் மைக்ரோசாஃப்ட் – 450 மில்லியன் டாலர் ஒதுக்கீடு

 

நிரந்தரமாக ரீடெயில் ஸ்டோர்களை மூடும் மைக்ரோசாஃப்ட் – 450 மில்லியன் டாலர் ஒதுக்கீடு

கலிபோர்னியா: மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் 80-க்கும் ரீடெயில் ஸ்டோர்களை நிரந்தரமாக மூட முடிவு செய்துள்ளது.

உலகம் முழுக்க பரவியுள்ள கொரோனா தொற்று பல்வேறு வணிகங்களுக்கு மூடுவிழா நடத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனமும் இணைந்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் 80-க்கும் ரீடெயில் ஸ்டோர்களை நிரந்தரமாக மூட முடிவு செய்துள்ளது. இதற்கான செலவுகளுக்காக அந்நிறுவனம் சுமார் 450 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கியுள்ளது. கடைகளை மூடுவதால் எத்தனை மைக்ரோசாப்ட் ஊழியர்கள் பாதிக்கப்பட உள்ளார்கள் என்ற விபரம் தற்போதைக்கு தெரியவில்லை.

மைக்ரோசாப்ட் தனது அனைத்து கடைகளையும் மூடிவிட்டு அதன் சில்லறை நடவடிக்கைகளை ஆன்லைன் மூலம் நடத்த உள்ளது. மேலும் லண்டன், நியூயார்க், சிட்னி மற்றும் வாஷிங்டன் தலைமையகம் ஆகிய இடங்களில் அனுபவ மையங்களை (Experience Centers) அந்நிறுவனம் அமைக்க உள்ளது.