ஜியோவின் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டும் மைக்ரோசாப்ட்….. முகேஷ் அம்பானிக்கு கொட்டும் பணம்..

 

ஜியோவின் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டும் மைக்ரோசாப்ட்….. முகேஷ் அம்பானிக்கு கொட்டும் பணம்..

முகேஷ் அம்பானியின் ஜியோவின் வருகை இந்திய தொலைத்தொடர்பு துறையில் மிகப்பெரிய மாற்றங்களை நிகழ்த்தியது. இலவச கால்கள், டேட்டா என்ற ஜியோவின் போட்டியை சமாளிக்க முடியாமல் பல தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் கடையை சாத்தி விட்டு சென்று விட்டன. ஜியோவின் போட்டியை சமாளித்து பார்தி ஏர்டெல், வோடாபோன் ஐடியா, பி.எஸ்.என்.எல். ஆகிய நிறுவனங்கள் மட்டுமே தாக்கு பிடித்து சந்தையில் நிற்கின்றன. ஆரம்பத்தில் லாபமே பார்க்காமல் இருந்த ஜியோ மெல்ல மெல்ல லாபத்தை ஈட்ட தொடங்கியுள்ளது. தற்போது முகேஷ் அம்பானிக்கு பணம் காய்க்கும் மரமாக ஜியோ உள்ளது.

ஜியோவின் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டும் மைக்ரோசாப்ட்….. முகேஷ் அம்பானிக்கு கொட்டும் பணம்..

முகேஷ் அம்பானி ஜியோவின் குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கடனை அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். முதலில் கடந்த ஏப்ரல் 22ம் தேதியன்று பேஸ்புக் நிறுவனம் ஜியோவின் 9.99 சதவீத பங்குகளை ரூ.43,547 கோடிக்கு வாங்கியது. இதனையடுத்து மே 4ம் தேதியன்று சில்வர் லேக் நிறுவனம் ஜியோவின் 1.15 சதவீத பங்குகளை ரூ.5,665.75 கோடி வாங்கியது. இந்த ஒப்பந்தம் நடந்து முடிந்த அடுத்த சில தினங்களில் (மே 8) தனியார் பங்கு முதலீ்ட்டு நிறுவனமான விஸ்தாவுக்கு ஜியோவின் 2.32 சதவீத பங்குகளை ரூ.11,367 கோடிக்கு விற்பனை செய்வதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்தது.

ஜியோவின் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டும் மைக்ரோசாப்ட்….. முகேஷ் அம்பானிக்கு கொட்டும் பணம்..

அதனைதொடர்ந்து கடந்த 17ம் தேதியன்று ஜியோவின் 1.34 சதவீத பங்குகளை ரூ.6,598.38 கோடிக்கு ஜெனரல் அட்லாண்டிக் வாங்கியதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது. கடந்த 22ம் தேதியன்று கே.கே.ஆர். நிறுவனம் ரூ.11,367 கோடிக்கு ஜியோவின் 2.32 சதவீத பங்குகளை வாங்கியது. ஆக, முகேஷ் அம்பானி ஜியோவின் 17.12 சதவீத பங்குகளை 5 நிறுவனங்களுக்கும் விற்பனை செய்து ரூ.78,562 கோடி முதலீட்டை திரட்டி விட்டார். இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறது.

ஜியோவின் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டும் மைக்ரோசாப்ட்….. முகேஷ் அம்பானிக்கு கொட்டும் பணம்..

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்தில் சுமார் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. ஜியோவின் 2.5 சதவீதத்துக்கு அதிகமான பங்குகளை வாங்க அந்நிறுவனம் ஆர்வமாக உள்ளது. இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரியில், மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி சத்யா நாதெள்ளா தனது நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவுடன் ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளது என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசாப்டை தவிர தற்போது அபுதாபி அரசு நிதியமான முபதாலா முதலீட்டு நிறுவனம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்தில் சுமார் ரூ.7,600 கோடி முதலீடு செய்வது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.