அசத்தலான அம்சங்களுடன் அதகளம் செய்யும் Mi QLED TV 75 இன்ச் ஆன்ட்ராய்டு டிவி!

 

அசத்தலான அம்சங்களுடன் அதகளம் செய்யும் Mi QLED TV 75 இன்ச் ஆன்ட்ராய்டு டிவி!

இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் நடுத்தர குடும்பத்தினர் தான். இந்தச் சூத்திரத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட சீன நிறுவனமான ஜியோமி அவர்கள் வாங்கும் விலைக்கேற்ப ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இந்தியாவில் கல்லா கட்டியது. ஸ்மார்ட்போன்களோடு மட்டும் நிற்காமல் தனது பிராண்ட் எல்லையை விஸ்தரிக்க காலில் அணியும் ஷூ முதல் முதுகில் தொங்கவிடும் பேக், எல்இடி டிவி வரை அனைத்தையும் தயார் செய்துள்ளது.

அசத்தலான அம்சங்களுடன் அதகளம் செய்யும் Mi QLED TV 75 இன்ச் ஆன்ட்ராய்டு டிவி!

அதனை இந்தியாவில் மிகவும் மலிவான விலையில் விற்பனை செய்து அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது. அந்த வகையில் ஒரு காலத்தில் நடுத்தர வர்க்கத்தினருக்கு எட்டாக்கனியாக இருந்த எல்இடி டிவிக்களை மிகக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தி வசூல் செய்திருக்கிறது ஜியோமி. இதுவரையில் 65 இன்ச் அகலம் கொண்ட டிவிக்களை மட்டுமே அறிமுகம் செய்துவந்த அந்நிறுவனம் தற்போது 75 இன்ச் டிவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

அசத்தலான அம்சங்களுடன் அதகளம் செய்யும் Mi QLED TV 75 இன்ச் ஆன்ட்ராய்டு டிவி!

Mi QLED TV 75 என்ற பெயரில் புதிய ஆன்ட்ராய்டு குவாண்டம் எல்இடி டிவி ஏப்ரல் 27ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இந்த டிவியானது ஆன்ட்ராய்டு 10 இயங்குதளம், ஜியோமி பேட்ச்வால் இயங்குதளம் என இரு இயங்குதளங்களில் இயங்கும். கூகுள் பிளே ஸ்டோர் வசதி இருப்பதால் பிரபலமான செயலிகள், கேம்கள் ஆகியவற்றை டிவியில் பதிவிறக்கம் செய்யலாம். Ultra HD சப்போர்ட் செய்வதால் யூடியூப், அமேசான் ப்ரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட செயலிகளில் படங்கள், சீரிஸ்களை அதிநவீன ஸ்ட்ரீமிங் உடன் கண்டுகளிக்கலாம்.

அசத்தலான அம்சங்களுடன் அதகளம் செய்யும் Mi QLED TV 75 இன்ச் ஆன்ட்ராய்டு டிவி!

Quad-core 64-bit A55 பிராஸசர் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல 2GB RAM+32GB ROM சேமிப்பு திறனைக் கொண்டுள்ளது. மிக முக்கியமாக 30W அளவிற்கு ஆடியோ அவுட்புட் கிடைக்கிறது. 2 ட்வீட்டர்கள், 2 டிரைவர்கள், 2 வூபர்களுடன் டால்பி அட்மாஸ் சவுண்ட் சிஸ்டம் இருப்பதால் ஆடியோ குவாலிட்டி அற்புதமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ரிமோட் இல்லாமல் நமது வாய்ஸ் மூலம் டிவியை இயக்கும் அம்சமும் இடம்பெற்றிருக்கிறது. 75 இன்ச் கொண்ட இந்த டிவி ரூ.1,19,999 என்ற விலையில் ஏப்ரல் 27ஆம் தேதி ஃபிளிப்கார்ட்டில் வெளியாகிறது. இதுவரை வெளியான ஜியோமி டிவிகளிலேயே அதிக விலையுடனும் அதிக அம்சங்களுடனும் வெளிவரும் முதல் டிவி.