• April
    06
    Monday

Main Area

Mainஎம்ஜிஆர் நடித்து வெளிவராத படங்களின் லிஸ்ட்…! இத்தனை படமா..! ? 

எம்ஜிஆர்
எம்ஜிஆர்

சினிமாவில் எம்ஜிஆர் எத்தனை வெற்றிகளை சுவைத்தாரோ அத்தனை தோல்விகளையும் , இழப்புகழையும் சந்தித்திருக்கிறார்.ஆரம்பமே சறுக்கல்தான்.1941-ல் அவர் டி.வி குமுதினியுடன் இணைந்து கதாநாயகனாக நடித்தபடம் ‘சாயா’ நின்றுபோனது.

kumidhini

அதற்குப் பிறகு அவர் மீண்டும் நாயகனாக 8 வருடம் காத்திருக்க வேண்டி இருந்தது, அதாவது ராஜகுமாரியில் நடிக்கும் வரை.மறுபடியும் துணை கதாபாத்திரங்கள்தான் ‘மருதநாட்டு இளவரசி’ வரும்வரை. அதற்குப் பிறகும் 1956-ல் மட்டும் ‘சிலம்பக்குகை', ‘மலைநாட்டு இளவரசன்’ , ‘குமாரதேவன்’, ‘ஊமையன் கோட்டை’ ஆகியபடங்கள் பாதியில் நிறுத்தப்பட்டு இருக்கின்றன. 

mgr

1957-ம் இதே கதைதான் ,வித்வான் லட்சுமணன் தயாரித்த ‘வாழப்பிறந்தவன்’, இதே ஆண்டில் ‘பவானி’ என்றொரு படம்,அஞ்சலிதேவி நாயகி,கண்ணதாசன் கதை,திரைக்கதை, எழுதி எம்ஜிஆருடன் இணைந்து தயாரித்த படம் 20 ஆயிரம் அடி வளர்ந்தபிறகு நின்று போனது! இதே ஆண்டில் ‘ஏழைக்கு காவலன்’ என்றொரு படமும் கைவிடப்பட்டு இருக்கிறது. 

sivaji

1958-ல் இரண்டு படங்கள் நின்ற போயின, ‘அதிரூப அமராவதி’ , ‘காத்தவராயன்’. இதில் காத்தவராயனை சிவாஜியை வைத்து எடுக்கும்படி டி.ஆர் ராமண்ணாவிடம் எம்ஜிஆரே சொல்லி இருக்கிறார். 1959-ல் இந்த லிஸ்ட் இன்னும் நீளம், ‘அட்வகேட் அமரன்’,’கானிநிலம்’, ‘கேள்விபதில்’, ‘நடிகன் குரல்’, ‘நாடோடி மகன்’ ( நாடோடி மன்னன் 2 ம் பாகம்) ‘பொன்னியின் செல்வன்’( இப்போது தான் இந்தக்கதை படமாகிக்கொண்டு இருக்கிறது) ‘தென்னரங்கன் கரை’,’தூங்காதே தம்பி தூங்காதே’! இதே கதையைத்தான் 1983-ல் கமலஹாசனை வைத்து படமாக்கியது எ.வி.எம்! 

kamal

அப்போது எம்ஜிஆர் தமிழகத்தின் முதல்வராகிவிட்டார்.1961-ல் ‘பரமபிதா’ என்கிற பெயரில் எம்ஜிஆர் ஏசுநாதராக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.கே.சங்கர் இயக்குனர். ஆனால் ஃபோட்டோ ஷுட்டுடன் நின்றுபோனது.இதே ஆண்டில் சந்திரபாபு தயாரிப்பில் துவங்கப்பட்ட ‘மாடிவீட்டு ஏழை’ நின்றுபோயிருக்கிறது.

1962-ல் அசோகன் நடித்து வெளிவந்த ‘இது சத்தியமும்’ சங்கர் இயக்கத்தில் எம்ஜிஆர் நடிப்பதாக துவங்கி நின்றுபோன படம்தான்.1963-ல் ‘அன்று சிந்திய இரத்தம்’ என்கிற பெயரில் எம்ஜிஆர் நடிக்க இயக்குனர் ஸ்ரீதர் துவங்கியபடமும் நின்றுபோய் , பிறகு சிவாஜி நடிப்பில் ‘சிவந்த மண்ணாக’ வெளிவந்தது.

sivaji

இதற்குப் பிறகு 1969-ல் பி.ஏ தாமஸ் இயக்கத்தில் ‘ஏசுநாதர்’ என்கிற படம் துவங்கி நின்றுபோனது.இதே தாமஸ்தான் இரண்டு வருடத்திற்கு பிறகு ‘தலைவன்’ படத்தை எடுத்தார்.1973-ல் எம்ஜிஆர் நடிப்பில் துவங்கிய ‘அணையா விளக்கு’ நின்றுபோய், பின்னர் மு.க முத்து நடித்து வெளிவந்தது. ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘கிழக்காப்பிரிக்காவில் ராஜு’வும் அறிவிப்போடு நின்று போய்விட்டது. 

mgr

எம்ஜிஆர் கட்சி துவங்கியபின் 1974-ல் ‘மக்கள் என்பக்கம்’, ‘சமூகமே நான் உனக்குச் சொந்தம்’ ( நாயகி லதா), ‘தியாகத்தின் வெற்றி’,1975-ல் ஸ்ரீதர் துவக்கிய ‘நானும் ஒரு தொழிலாளி’( இதைத்தான்1986-ல் கமலஹாசனை வைத்து இதே பெயரில் படமாக்கினார் ஸ்ரீதர்) 1976-ல் ஸ்ரீதர் இயக்கத்தில் எடுக்கப்பட்ட ‘அண்ணா நீ என் தெய்வம்’ படமும் நின்று போனது.ஆனால் இந்தப் படத்துக்காக எடுக்கப்பட்ட சில காட்சிகளை வைத்து எம்ஜிஆரின் மறைவிற்கு பிறகு கே.பாக்கியராஜ் ‘அவசரபோலீஸ் 100’ என்கிற பெயரில் படத்தை உருவாக்கினார்.

avasra police 100

இன்னும் 76-ல் ‘புரட்சிப் பித்தன்’,77-ல் எம்ஜிஆர் தமிழக முதல்வராக அமர்ந்த பிறகும் அவருக்கு இருந்த சினிமா காதல் தீரவில்லை. அதே ஆண்டில் ‘நல்லதை நாடு கேட்கும்’,78-ல் ‘அக்கரைப் பச்சை’, 78-ல் ‘கேப்டன் ராஜு’, ‘இளைய தலைமுறை’, 1980-ல் ‘இதுதான் பதில்’, ‘உன்னை விடமாட்டேன்’ என்று கடைசிவரை சினிமாவை விட மனதில்லாமலே தான் வாழ்ந்து மறைந்தார் எம்ஜிஆர்.

2018 TopTamilNews. All rights reserved.