எம்.ஜி.ஆரின் 5000 ரூபாய் நன்கொடையும் பெரியாரின் பதிலும்! – #MGR

 

எம்.ஜி.ஆரின் 5000 ரூபாய் நன்கொடையும் பெரியாரின் பதிலும்! – #MGR

எம்.ஜி.ஆர் திராவிட இயக்கத்தின் வழியே வளர்ந்த தலைவர். நாடகங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர் காந்திய கொள்கைகள் மீது ஆர்வம் கொண்டிருந்தார். அதனால் காங்கிரஸ் கட்சியோடு சில பணிகளைச் செய்தார். அடுத்து சில ஆண்டுகளில் அண்ணாவின் பேச்சுகள் எம்.ஜி.ஆரை வசிகரித்தன.

அதனால், திமுகவின் தன்னை இணைத்துக்கொண்டார். பல ஊர்களுக்குச் சென்று கூட்டங்களில் பேசினார். அண்ணாவின் பேச்சுக்கு தன்னையே இழக்கும் அளவுக்கு ரசிகனானார். கலைஞர் கருணாநிதியின் நட்பு இன்னும் வலுப்பெற்றது.

எம்.ஜி.ஆரின் 5000 ரூபாய் நன்கொடையும் பெரியாரின் பதிலும்! – #MGR

இந்த இருவருக்கு மூலவர் பெரியார் என்பது எம்.ஜி.ஆருக்கு நன்கு தெரிந்தது. அதனால், பெரியார் மீது மிகுந்த அன்பும் பாசமும் மரியாதையும் வைத்திருந்தார்.

திமுகவில் எம்.ஜி.ஆர் இருக்க முடியாத சூழலில் தனிக்கட்சியாக அதிமுகவைத் தொடங்கினார். அதன்பின் எம்.ஜி.ஆர் இறக்கும் வரை தமிழத்த்ன் முதல்வராகவே இருந்தார் என்பது தனிக் கதை. எம்.ஜி.ஆரின் எந்தச் சூழலிலும் பெரியார் மீது அவர் வைத்திருந்த மதிப்பு என்றைக்குமே குறைந்தது இல்லை. ஏனெனில் பெரியால் கொள்கைகள் மீது அளவற்ற ஈர்ப்பு எம்.ஜி.ஆருக்கு உண்டு. அதைப் பல இடங்களில் வெளிப்படுத்தவும் செய்திருக்கிறார். அதேபோல பெரியாரும் எம்.ஜி.ஆர் மீது நல்ல மதிப்பே கொண்டிருந்தார்.

எம்.ஜி.ஆரின் 5000 ரூபாய் நன்கொடையும் பெரியாரின் பதிலும்! – #MGR

பெரியாரின் பிறந்த ஒன்றில் எம்.ஜி.ஆர் தன் நண்பர்களோடு வந்து பார்த்தார். அப்போது பெரியார் உடல் தளர்ந்து நிலையில் இருந்தர். சிறுவர்களுக்கும் மரியாதை கொடுக்கும் பண்பு கொண்டவர் பெரியார். அதனால், தளர்ந்த நிலையில் எழுந்திருக்க பெரியார் முயற்சி செய்தார். ஆனால், எம்.ஜி.ஆர் அவரை அமர்த்தி வணக்கம் தெரிவித்தார். அப்போது 5000 ரூபாயை நன்கொடையாக அளித்தார் எம்.ஜி.ஆர்.

அதை மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்ட பெரியார் “என் மீதான உங்கள் அன்பு அபரிமிதமானது” என்று தெரிவித்தார். அதைக் கேட்டு எம்.ஜி.ஆர் சொற்களற்று திகைத்து அவரின் கைகளைப் பிடித்துக்கொண்டாராம். பெரியார் – எம்.ஜி.ஆர் நட்பு குறித்து புத்தகமே எழுதப்பட்டிருக்கிறது.

இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த தினம். அதனால், அவரின் உருவச் சிலைக்கு பலரும் மாலை அணிவித்து, அவரின் புகழை, சிந்தனைகளைப் பற்றி நினைவு கூர்கின்றனர். இதில் அனைத்துக் கட்சியினரும் ஈடுபடுகின்றனர் என்பது இன்னும் சிறப்பு.