• April
    05
    Sunday

Main Area

Main



இலவச வேட்டி சேலை முதல் இலவச ஆம்புலன்ஸ் வரை அத்துணை திட்டத்திற்கு சொந்தக்காரர் எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் (
எம்.ஜி.ஆர் (

தமிழ்த் திரையுலகில் தடம் பதித்து பின்னாளில் அரசியலில் நுழைந்த எம்.ஜி.ஆர். 1977ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 1௦ வருடங்கள் 3 முறை தமிழக முதல்வர் பதவியில் இருந்தார். இதற்கு முக்கிய காரணம் அவரின் எளிமையும், சிறப்பான திட்டங்களுமே. இப்போது இருக்கக்கூடிய திட்டங்களில் முக்கால்வாசி எம்.ஜி.ஆர் கொண்டுவந்த திட்டங்களே. 

mgr

நியாய விலைக் கடை!

இன்று நியாய விலைக்கடைகளில் இலவச அரியும், மானிய விலையில் பருப்பு, சர்க்கரை, கோதுமை உள்ளிட்டப் பொருட்களை ஏழைகள் வாங்கி செல்வதற்கு காரண கர்த்தாவாக இருந்தவர் எம்.ஜி.ஆர். அவர் தான் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை அறிமுகம் செய்தார்.

coop

அதன்மூலம் நமது மாநிலத்துக்குத் தேவையான உணவுப் பொருட்களை அதிகம் விளையும் இடங்களில் நாமே கொள்முதல் செய்து, அனைத்து மக்களுக்கும் பயன்படும்வகையில் நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்யும் திட்டத்தை கொண்டு வந்தார். இதற்காக குடும்ப அட்டைகளை அறிமுகப்படுத்தி அதன்மூலம் நியாயவிலைக்கடைகளில் மக்கள் பொருட்கள் வாங்கும் திட்டத்தை அமல்படுத்தினார். இதன் மூலம் லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் மூன்று வேலை வயிறார உணவருந்தினர். 

மதிய உணவு திட்டம்

1920 ஆம் ஆண்டு எம். ஜி.ஆர் தொடங்கிய மற்றொறு மகத்தான திட்டம் மதிய உணவு திட்டம். முதலில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில்தான் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.

mgr

காரணம், பள்ளிக்கு வர இயலாத வறுமையான மாணவர்களை ஈர்க்க இதுவே சரியான திட்டம் என எண்ணினார். இதன்மூலம் ஏராளமான மாணவர்கள் உணவுக்காகவே பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர். தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். பதவியேற்ற பிறகு, பள்ளி விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படவேண்டும் என உத்தரவிட்டார். 

தாலிக்கு தங்கம்

மகளிரை ஈர்க்க விதவை ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவி, தாலிக்கு தங்கம் வழங்குதல், மகளிருக்கு சேவை நிலையங்கள், பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள்,

mgr

தாய் சேய் நல இல்லங்கள், மாணவர்களுக்கு இலவச சீருடை, காலணி வழங்குதல், பள்ளிகளில் இலவச பாடநூல் வழங்கும் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்புத் திட்டம், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்களை அமல்படுத்தினார்.


இலவச வேட்டி சேலை திட்டம் 

இன்று பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் அரசின் திட்டம் எம்.ஜி.ஆர் ஆட்சியில் தொடங்கப்பட்டது. மேலும் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம், குடிசைக்கு ஒரு மின்விளக்கு, வீட்டிக்கொருவருக்கு வேலை, சுய வேலை வாய்ப்பு திட்டங்கள், படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என அத்துணை திட்டங்களையும் அறிமுகப்படுத்தியவர் எம்.ஆர். ஆர்.

mgr

காலப்போக்கில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் மறைந்தாலும் சில நலத்திட்டங்கள் இன்றும் மக்களுக்கு பயன்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. இதேபோல் இன்று இலவச எண்ணை தொடர்பு கொண்டால் பாய்ந்துவரும் இலவச ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு கூட எம்.ஜி.ஆரே சொந்தக்காரர்.

2018 TopTamilNews. All rights reserved.