அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு?

 

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு?

சென்னை பட்டாபிராமைச் சேர்ந்தவர் எம்.ஜி.ஆர். விஸ்வநாதன். இவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “கடந்த 2016ஆம் ஆண்டு எம்ஜிஆர் மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளேன். எங்கள் கட்சி முந்தைய தேர்தல்களில் போட்டியிட்டிருக்கிறது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட டார்ச் லைட் சின்னத்தைத் திருப்பியளித்து விட்டு எம்ஜிஆரை நினைவுபடுத்தும் வகையில் ஆட்டோ ரிக்‌ஷா, தொப்பி ஆகிய சின்னங்களில் ஒன்றை ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பித்தேன்.

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு?

எங்கள் கட்சி சார்பில் ஆவடி, எடப்பாடி, சேலம் வடக்கு, ஈரோடு கிழக்கு, வேளச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். இதில் ஆவடி தவிர மற்ற தொகுதிகளில் ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆவடி தொகுதியில் பொது சின்ன பட்டியலில் ஆட்டோ ரிக்‌ஷா இருந்தும் அதை எங்கள் கட்சிக்கு ஒதுக்கவில்லை. அதனால் அந்தத் தொகுதியில் மட்டும் தேர்தலை ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும். ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தை எங்கள் கட்சிக்கு ஒதுக்கிடவும் உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு?
எம்ஜிஆர் மக்கள் கட்சி தலைவர் விஸ்வநாதன்

இந்த ஆவடி தொகுதி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் போட்டியிடும் தொகுதியாக இருக்கிறது. அதேபோல கடந்த மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் இம்முறை அச்சின்னம் ஒதுக்கப்படாமல் இருந்தது. அதற்குப் பதிலாக எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. பின்னர் இரு கட்சிகள் சார்பிலும் தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதப்பட்டது. மநீம டார்ச் லைட் ஒதுக்கக் கோரியும், எம்ஜிஆர் மக்கள் கட்சி அச்சின்னம் வேண்டாம் என்றும் கோரியும் கடிதம் எழுதியிருந்தன. இதற்குப் பின்பே டார்ச் லைட் சின்னம் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒதுக்கப்பட்டது.