ஒரு பக்கம் கொரோனா… மறுபக்கம் புயல் – அல்லாடும் மெக்சிகோ

 

ஒரு பக்கம் கொரோனா… மறுபக்கம் புயல் – அல்லாடும் மெக்சிகோ

கொரோனா கோரத்தாண்டவம் ஆடும் நாடுகளில் மெக்சிகோவும் ஒன்று. தற்போது புயலும் சேர்ந்துகொண்டு அந்த நாட்டைப் படாதபாடு படுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 57 லட்சத்து 01 ஆயிரத்து 674 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 68 லட்சத்து 70 ஆயிரத்து 533 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 10 லட்சத்து 45 ஆயிரத்து 953 பேர்.

ஒரு பக்கம் கொரோனா… மறுபக்கம் புயல் – அல்லாடும் மெக்சிகோ

மெக்சிகோவில் கொரோனாவின் மொத்த பாதிப்பு 7,61,665. இவர்களில் குணமடைந்தவர்கள் 5,50,053. சிகிச்சைப் பலன் அளிக்காது இறந்தவர்கள் 79,088 பேர். உலகளவில் கொரோனா அதிகம் பலி வாங்கிய நாடுகளில் மெக்சிகோ 4-ம் இடத்தில் உள்ளது. அமெரிக்கா, பிரேசில், இந்தியாவை முதல் மூன்று இடங்களில் உள்ளன.

ஒரு பக்கம் கொரோனா… மறுபக்கம் புயல் – அல்லாடும் மெக்சிகோ

இந்நிலையில் மெக்சிகோவில் கடும் புயல் வீசியது. அதன் பெயர் கம்மா புயல் என்று சூட்டப்பட்டுள்ளது. கம்மா புயல் சுமார் ஆறு லட்சத்துக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கி விட்டது. முன்னெச்சரிக்கையாக பலரை வேறு இடத்துக்கு இடம் மாற்றப்பட்டாலும் இந்தப் பாதிப்பை அந்நாட்டு அரசால் தவிர்க்க முடியவில்லை.

புயலை ஒட்டிய பெருமழையால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் சிக்கி 4 பேர் இறந்துள்ளனர்.