மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 12,894 கன அடியாக அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 12,894 கன அடியாக அதிகரிப்பு!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்வரத்து 12,894 கன அடியாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 12,894 கன அடியாக அதிகரிப்பு!

இந்நிலையில் விவசாயிகளின் நீர் பாசன வசதிக்காக இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 8,622 கன அடியில் இருந்து 12,894 கன அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.78 அடியாகவும், நீர் இருப்பு 54.70 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 12,894 கன அடியாக அதிகரிப்பு!

காவிரி டெல்டா பாசனத்துக்கு 15,000 கன அடி, கிழக்கு-மேற்கு கால்வாயில் விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.