‘இந்த நேரத்தில் மட்டுமே மெட்ரோ ரயில் இயங்கும்’.. மெட்ரோவுக்கு நேரக் கட்டுப்பாடு!

 

‘இந்த நேரத்தில் மட்டுமே மெட்ரோ ரயில் இயங்கும்’.. மெட்ரோவுக்கு நேரக் கட்டுப்பாடு!

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக பொதுப்போக்குவரத்து சேவை அனைத்தும் முடக்கப்பட்டிருந்தது. ஆனால் கிட்டத்தட்ட 5 மாதங்களாக பொதுப்போக்குவரத்து இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். அதனை கருத்தில் கொண்ட அரசு, கடந்த 1 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க அனுமதி அளித்தது. அதே போல 7 ஆம் தேதியில் இருந்து மெட்ரோ ரயில்களும் இயங்கும் என அறிவித்தது. இந்த அறிவிப்பு மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

‘இந்த நேரத்தில் மட்டுமே மெட்ரோ ரயில் இயங்கும்’.. மெட்ரோவுக்கு நேரக் கட்டுப்பாடு!

இதனிடையே மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து இயக்கம் மற்றும் பயணிகள் ரயில் சேவையையும் 7 ஆம் தேதி முதல் அனுமதிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்னை புறநகர் ரயில்கள் இயங்குவது குறித்த எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் 7 ஆம் தேதி முதல் இயங்க உள்ள மெட்ரோ ரயிலுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது சென்னையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்றும் அலுவலக நேரமான காலை 8.30 முதல் 10.30 வரை 5 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்றும் அலுவலகம் இல்லாத நேரத்தில் 10 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்றும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், 7 ஆம் தேதி முதல் சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை இடையே ரயில்கள் இயக்கப்படும் என்றும் 9 ஆம் தேதி முதல் பரங்கிமலையில் இருந்து சென்ட்ரல் வரை ரயில்கள் இயக்கப்படும் என்றும்