மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய போறீங்களா ? அப்ப இத படிங்க

 

மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய போறீங்களா ? அப்ப இத படிங்க

கொரானா பரவல் காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இப்போது மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்படவுள்ளன. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவையினை தொடங்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதற்கு தமிழக அரசும் அனுமதி அளித்தது. அதன்படி செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் பெருநகர சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய போறீங்களா ? அப்ப இத படிங்க

இந்நிலையில் மெட்ரோ ரயில் சேவை வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில்,

பயணிகளுக்கு மாஸ்க் ,ஸ்மார்ட் கார்டு கட்டாயமென்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை, சமூக இடைவெளி போன்ற அனைத்து விதி முறைகளும் பின்பற்றப்படும்

கொரோனா தொற்று அறிகுறி இல்லாத நபர்களை மட்டுமே ரயிலில் அனுமதிக்க வேண்டும்

கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் செயல்படாது

உடல்வெப்ப நிலை பரிசோதனைக்கு பிறகே பயணிகளை மெட்ரோ ரயில் நிலையத்தில் அனுமதிக்க வேண்டும்

பயணிகள் மாஸ்க் அணிந்திருப்பதை மெட்ரோ ரயில் நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது