விவசாய பம்பு செட்டுகளில் மின் மீட்டர்கள் பொருத்தும் பணி நிறுத்தம் – அமைச்சர் தங்கமணி

 

விவசாய பம்பு செட்டுகளில் மின் மீட்டர்கள் பொருத்தும் பணி நிறுத்தம் – அமைச்சர் தங்கமணி

தற்போது விவாசாயத்திற்கு இலவசமாக வழங்கப்பட்டு வரும் மின் இணைப்புகளின் பயன்பாட்டை அறிய மீட்டர் கருவி பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. மின் இணைப்புக்கு கட்டணம் வாங்க தான் அந்த மீட்டர் பொருத்தப்படுகிறது என்று விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அதே போல, விவசாயிகள் 5 குதிரை திறனுக்கு மேல் மோட்டார் பயன்படுத்தினால் ரூ.20,000 செலுத்த வேண்டும் என்றும் மின்வாரியம் அறிவித்தது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

விவசாய பம்பு செட்டுகளில் மின் மீட்டர்கள் பொருத்தும் பணி நிறுத்தம் – அமைச்சர் தங்கமணி

இது குறித்து விளக்கம் அளித்த மின் வாரியம், எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிய தான் மீட்டர்கள் பொருத்தப்படுவதாகவும் இதனால் விவசாயிகள் அச்சம் அடைய வேண்டாம் என்றும் இலவச மின்சாரத் திட்டத்தின் கீழ் இலவசமாக மின்சாரம் வழங்கப்படும் என்ற தெரிவித்திருந்து.

இந்நிலையில் அமைச்சர் தங்கமணி புதிய மின் மீட்டர் பொருத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். விவசாய பம்பு செட்டுகளில் மின் மீட்டர்கள் பொருத்தும் பணியை நிறுத்துமாறு முதல்வர் உத்தரவிட்டதால் அப்பணி நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தட்கல் திட்டத்தில் புதிய மீட்டர் பொருத்தப்பட்டு வந்ததை முதல்வர் வேண்டாம் என்று கூறி விட்டதாகவும் இலவச மின்சார திட்டம் தொடங்க வேண்டும் என்பதே முதல்வரின் விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார்.