#MeToo விவகாரத்தில் சிக்கிய மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா

 

#MeToo விவகாரத்தில் சிக்கிய மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா

மீ டூ விவகாரத்தில் சிக்கியுள்ள மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்துள்ளார்

டெல்லி: மீ டூ விவகாரத்தில் சிக்கியுள்ள மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்துள்ளார்.

பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை மீ டூ என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பரும் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார்.

அவர் மீது பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி உள்ளிட்ட பல்வேறு பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்துள்ளனர். எம்.ஜே.அக்பர் பத்திரிகையாளராக இருந்தபோது பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அப்பெண்கள் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை அக்பர் மறுத்துள்ளார். அத்துடன், தன் மீது குற்றச்சாட்டை எழுப்பியுள்ள பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் எம்.ஜே.அக்பர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.