#MeToo விவகாரத்தில் சிக்கியுள்ள பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி

 

#MeToo விவகாரத்தில் சிக்கியுள்ள பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி

மீ டூ விவகாரத்தில் சிக்கியுள்ள பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

மதுரை: மீ டூ விவகாரத்தில் சிக்கியுள்ள பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹாலிவுட்டில் துவங்கிய #MeToo எழுச்சியை தொடர்ந்து, உலகம் முழுவதும், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் சக்திவாய்ந்த ஆண்கள், ஊடக வெளிச்சத்திற்கு வந்துள்ளனர். இந்திய சினிமாவிலும், ஸ்ரீ ரெட்டி, தனுஸ்ரீ தத்தா உள்ளிட்ட நடிகைகள், தங்களிடம் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் தவறாக நடந்து கொண்டதாகவும், சினிமா வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்ததாகவும் குற்றம் சாட்டினர். 

அந்தவகையில், நூற்றுக்கணக்கான படங்களுக்கு பாடல்கள் எழுதி, 7 முறை தேசிய விருது பெற்றுள்ள பாடலாசிரியர் வைரமுத்துவின் மீதும் #MeToo மூலம் பாலியல் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளது. தனக்கு 18 வயது இருக்கும்போது  பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பெண் ஒருவர் கூறிய குற்றச்சாட்டுகளை பத்திரிகையாளர் சந்தியா மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதேபோல், பின்னனி பாடகி சின்மயியும் வைரமுத்து மீது மீ டூ மூலம் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இந்த விவகாரம் தமிழ் சினிமா அரங்கிலும், அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள வைரமுத்து, அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும் என விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில், மீ டூ விவகாரத்தில் சிக்கியுள்ள பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு ஒவ்வாமை காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் கவிஞர் வைரமுத்து அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.