#Metoo போயாச்சு… #MenToo வந்தாச்சு…

 

#Metoo போயாச்சு… #MenToo வந்தாச்சு…

அண்மையில் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய #Metoo இயக்கத்திற்கு போட்டியாக தற்போது #MenToo இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 

அண்மையில் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய #Metoo இயக்கத்திற்கு போட்டியாக தற்போது #MenToo இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பிரபலங்கள் தொடங்கி பத்திரைக்கையாளர் உட்பட அனைத்து துறைகளிலும் உள்ள பெண்கள், ஆண்களால் தமக்கு நேர்ந்த கொடுமைகளை #Metoo என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டு சர்ச்சைகளை ஏற்படுத்தினர். இந்தியா மட்டுமின்றி பல நாடுகளில் #Metoo விற்கு ஆதரவு பெருகியது மட்டுமல்லாது பல உண்மைகளும் வெளிவந்தன. 

இந்நிலையில் ஆண்களுக்கு எதிராக பெண்கள் பாலியல் குற்ற வழக்குகளை தவறாக பயன்படுத்துவதாக கூறி #MenToo  இயக்கம் தொடங்கப்பட்டுள்ளாது. அண்மையில் நடிகர் கரண் ஓபராய் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து ஓபராய் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவு தெரிவித்த அவரது நண்பர்களும், ரசிகர்களும் #MenToo இயக்கத்தை தொடங்கியுள்ளனர். 

ஓபராய் மீது புகார் அளித்த பெண்ணும் தங்கள் நண்பரும் காதலித்து வந்ததாகவும், இருவரும் பிரிந்த நிலையில் தற்போது அந்த பெண் பொய்ப்புகார் அளித்துள்ளதாகவும் ஓபராயின் நண்பர்கள் தெரிவிக்கின்றனர். பெண் என்ற ஒற்றை அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஆண்களுக்கு எதிராக பாலியல் பொய்யான குற்ற வழக்குகளை பெண்கள் பயன்படுத்துவதாக #MenToo இயக்கத்தினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.  மேலும் சட்டத்தை தவறாக பயன்படுத்தும் பெண்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் MenToo இயக்கத்தை மென்கள் வலியுறுத்தியுள்ளனர்.