பார்சிலோனாவுக்காக முதல்முறையாக ரெட் கார்டு வாங்கிய மெஸ்ஸி; எத்தனை போட்டிகளுக்கு தடை விதிக்கப்படும்?

பார்சிலோனாவுக்காக முதல்முறையாக ரெட் கார்டு வாங்கிய மெஸ்ஸி; எத்தனை போட்டிகளுக்கு தடை விதிக்கப்படும்?

பார்சிலோனாவுக்காக விளையாடிய 753 போட்டிகளில் முதல் முறையாக ரெட் கார்டு கொடுக்கப்பட்டு மெஸ்ஸி ஆட்டத்திலிருந்து வெளியே அனுப்பப்பட்டார். சர்வதேச அளவில் அவர் வாங்கும் மூன்றாவது ரெட் கார்டு இதுவாகும்.

இதற்கு முன் அர்ஜென்டினா அணிக்காக விளையாடிபோது, 2005ஆம் ஆண்டில் அறிமுக போட்டியிலேயே ரெட் கார்டு வாங்கி வெளியே சென்றார். அதன்பின், 2019ஆம் ஆண்டு கோபா அமெரிக்கா தொடரின் பிளேஆப் சுற்றில் ரெட் கார்டு வாங்கினார்.

பார்சிலோனாவுக்காக முதல்முறையாக ரெட் கார்டு வாங்கிய மெஸ்ஸி; எத்தனை போட்டிகளுக்கு தடை விதிக்கப்படும்?
மெஸ்ஸிக்கு வழங்கப்பட்ட முதல் ரெட் கார்டு

நேற்று ஸ்பானிஸ் சூப்பர் கோப்பை பைனலில் பார்சிலோனாவும் அதலெட்டிக் பில்பாவும் மோதின. முதல் பாதியி 40ஆவது நிமிடத்தில் கிரிஸ்மன் கோல் அடித்து அடுத்த 2ஆவது நிமிடத்தில் (42) பில்போவ் அணியின் மார்கோஸ் கோல் அடித்து சமன் செய்தார்.

இதையடுத்து இரண்டாம் பாதியின் 77ஆவது நிமிடம் மீண்டும் கிரிஸ்மன் கோல் அடிக்க பார்சிலோனா முன்னிலை பெற்றது. இச்சூழலில் இறுதி நிமிடத்தில் (90) பில்போவின் வில்லாலிபர் கோல் அடித்து மீண்டும் சமன் செய்தார். இதையடுத்து கூடுதலாக 30 நிமிடங்கள் (extra time) ஒதுக்கப்பட்டது.

பார்சிலோனாவுக்காக முதல்முறையாக ரெட் கார்டு வாங்கிய மெஸ்ஸி; எத்தனை போட்டிகளுக்கு தடை விதிக்கப்படும்?
கோபா தொடரில் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்ட ரெட் கார்டு

கூடுதல் நேரத்தின் ஆரம்பத்திலேயே பில்போவின் இனாகி வில்லியம்ஸ் கோல் அடித்து பார்சிலோனாவை கடுப்பேற்றினார். பின்னர் பார்சிலோனா எவ்வளவு முயற்சித்தும் கோல் அடிக்க முடியவில்லை. இந்த நிலையில் தான் மெஸ்ஸி பயங்கரமான பவுலை நிகழ்த்தினார்.

ஆட்டம் முடியும் தருவாயில் பந்தை கோல் ஏரியாவுக்குள் பாஸ் செய்த மெஸ்ஸி, அவரைத் தடுக்கவந்த வில்லாலிபரை கையால் தாக்கி கீழே சாய்த்தார். ஆரம்பத்தில் இதைக் கவனிக்காத ரெப்ரி VAR-ல் பார்த்து மெஸ்ஸிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பினார்.

பார்சிலோனாவுக்காக முதல்முறையாக ரெட் கார்டு வாங்கிய மெஸ்ஸி; எத்தனை போட்டிகளுக்கு தடை விதிக்கப்படும்?
நேற்றைய போட்டியில் கொடுக்கப்பட்ட ரெட் கார்டு

மிகவும் அபாயகரமான பவுல் நிகழ்த்தப்பட்டால் மட்டுமே ரெட் கார்டு வழங்கப்படும். அம்மாதிரியான பவுலை தான் மெஸ்ஸி நிகழ்த்தினார். ஸ்பானிஸ் கால்பந்து ஒழுக்க விதிகளின் 98ஆவது பிரிவின்படி மெஸ்ஸிக்கு 4 முதல் 12 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

எனினும், நிச்சயம் 4 போட்டிகளுக்குத் தடை விதிப்பது உறுதி. மெஸ்ஸி நிகழ்த்திய பவுலின் தீவிரத்தைப் பொறுத்து 12 போட்டிகளுக்கு கூட விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பார்சிலோனாவுக்காக முதல்முறையாக ரெட் கார்டு வாங்கிய மெஸ்ஸி; எத்தனை போட்டிகளுக்கு தடை விதிக்கப்படும்?

அதேபோல, ஸ்பானிஸ் தொடரில் எடுக்கப்பட்ட இந்த முடிவு (ரெட் கார்டு இடைநீக்கம்) அடுத்து நடைபெறவிருக்கும் உள்நாட்டு விளையாட்டுத் தொடர்களுக்கும் தொடரும். அவ்வாறு தொடர்ந்தால் கோபா டெல் ரே தொடரில் பார்சிலோனாவுக்கு எதிரான கார்னெல்லா போட்டியை மெஸ்ஸி மிஸ் செய்வார் என்று தெரிகிறது. அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை.