”ஒரு முறை பார்த்தவுடன் அழியும் மெசேஜ்”- வாட்ஸ் அப் திட்டம்

”ஒரு முறை பார்த்தவுடன் அழியும் மெசேஜ்”-  வாட்ஸ் அப் திட்டம்

ஒரு முறை பார்த்தவுடன் மீடியா ஃபைல்கள் தானாகவே அழியும் வகையிலான புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த வாட்ஸ் அப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

”ஒரு முறை பார்த்தவுடன் அழியும் மெசேஜ்”-  வாட்ஸ் அப் திட்டம்

சமீபத்தில் வெளியாகி உள்ள சோதனை பீட்டா வெர்சனில் இந்த வசதி இடம்பெற்றுள்ளதாகவும், இந்த சோதனைக்கு பின்னர், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எக்ஸ்பையரிங் மீடியா என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த வசதியின் கீழ் அனுப்ப ப்படும் எந்த ஒரு இமேஜ், வீடியோ மற்றும் ஜிஎப் அனிமேஷன்களும், ஒரு முறை பார்த்தவுடன் தானாகவே அழிந்துவிடும் என தெரிகிறது.

”ஒரு முறை பார்த்தவுடன் அழியும் மெசேஜ்”-  வாட்ஸ் அப் திட்டம்

அதாவது எந்த ஒரு மெசேஜ் அனுப்புவதற்கு முன்பு ”ஒரு முறை மட்டும் பார்க்க’ என தேர்வு செய்து அனுப்பலாம் என்றும், அவற்றை பெறுவோர் அந்த சாட்டிங்கை விட்டு சென்றவுடன், தானாகவே அந்த ஃபைல் அழிந்துவிடும் என தெரிகிறது. இத்தகைய வசதி தற்போது பீட்டா எனப்படும் சோதனை வெர்சனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சில ஸ்கீரின் ஷாட்டுகள், ஆன்லைனில் உலா வருகிறது.

”ஒரு முறை பார்த்தவுடன் அழியும் மெசேஜ்”-  வாட்ஸ் அப் திட்டம்

எனினும் இந்த வசதி எப்போது அறிமுகப்படுத்தப்படும் என வாட்ஸ் அப் நிறுவனம் இது வரை அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கவில்லை.

  • எஸ். முத்துக்குமார்