கொரோனா பரிசோதனை முடிவுகளில் குளறுபடி.. வெளியாகும் அதிர்ச்சி தகவல்!

 

கொரோனா பரிசோதனை முடிவுகளில் குளறுபடி.. வெளியாகும் அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவல் சங்கிலியை உடைப்பதற்காக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையிலும் பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் மேல் உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னையிலேயே பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் தற்போது கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், அந்த மாவட்டங்களில் பரிசோதனையை அதிகரிக்குமாறு முதல்வர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

கொரோனா பரிசோதனை முடிவுகளில் குளறுபடி.. வெளியாகும் அதிர்ச்சி தகவல்!

இந்த நிலையில், தஞ்சாவூரில் கொரோனா பரிசோதனை முடிவில் குளறுபடி ஏற்பட்டு இருப்பதாக வெளியாகும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த 22ம் தேதி மணகரம்பை பகுதியை சேர்ந்த மதுசேகர் மற்றும் ஷோபனா ஆகிய இரண்டு பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இருவருக்குமே பாதிப்பு உறுதியான நிலையில், மதுசேகருக்கு மட்டுமே மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்து அருகிலுள்ள சிகிச்சை மையத்திற்கு செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரிசோதனை முடிவுகளில் குளறுபடி.. வெளியாகும் அதிர்ச்சி தகவல்!

ஆனால், ஷோபனாவிற்கு எந்த அழைப்பும் வரவில்லையாம். இதையடுத்து ஷோபனாவே அந்த மையத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, தங்களுக்கு கொரோனா இருப்பது போன்ற எந்த முடிவுகளும் தங்களுக்கு வரவில்லை என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், தனக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியாமல் ஷோபனா தவிர்த்து வருகிறார். ஷோபனாவை போலவே பலருக்கு அப்பகுதியில் பாதிப்பு இருப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.