Home க்ரைம் சாலையில் தூங்கும் பெண்ணை தினமும் இரவில் ஆட்டோவில் அழைத்துச்சென்று...! அந்த மனித மிருகங்களை தேடும் போலீஸ்!

சாலையில் தூங்கும் பெண்ணை தினமும் இரவில் ஆட்டோவில் அழைத்துச்சென்று…! அந்த மனித மிருகங்களை தேடும் போலீஸ்!

எந்த ஊரோ தெரியவில்லை. அந்தப்பெண்ணோட சொந்தபந்தம் யாரு என்றும் அங்கிருக்கும் யாருக்கும் தெரியாது. மேரி என்றுதான் அங்கிருப்பவர்கள் அழைத்து வருகிறார்கள் மனநலம் பாதித்த அப்பெண்ணை.

திருச்சி புத்தூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில்தான் சுற்றித்திரிவார். அங்கு வருவோர் போவோர் கொடுக்கும் உணவை சாப்பிட்டு, அப்பகுதியிலேயே எங்காவாது தூங்கிவிடுவார்.

கடந்த சில தினங்களாகவே அவரை இரவில் அங்கே காணமுடியவில்லை. உணவு கொடுக்க பலர் தேடியபோதும் அவர் இருப்பதில்லை. ஆனால், காலையில் பார்த்தால் மயங்கிய நிலையிலேயே பொழுது விடிந்து வெகுநேரமாகியும் எழுந்திருக்காமல் கிடந்தார். அப்படித்தான் அன்றைய இரவும் அவருக்கு உணவுகொடுக்க தேடியபோது அவர் அங்கே இல்லை. மறுநாள் காலையில் வழக்கம் போலவே தூங்கிக்கொண்டிருந்தார். ஆனால், போவோர் வருவோர் நின்று பார்த்துவிட்டு சென்றனர்.

மருத்துவனை அருகே இருக்கும் ஓட்டலில் சமையல் மாஸ்டராக இருக்கும் கார்த்திக், இதைப்பார்த்துவிட்டு ஓடிவந்தார். ஆடைகள் கிழிந்து, உடல் முழுவதும் ரத்தக்கீறல்களுடன் கிடந்தார் மேரி. அவரை தட்டி எழுப்பியபோது, தூக்கத்தில் இல்லை. அரைமயக்கத்தில் இருக்கிறார் என்பது புரிந்தது. அதே நேரத்தில் மேரிக்கு அருகே நின்றிருந்த ஆட்டோவில் சிலர் அரை மயக்கத்தில் இருந்திருக்கிறார்கள். அவர்களை கார்த்தி மற்றும் சிலர் பிடித்து இழுத்தபோது, ஆட்டோவில் பறந்துவிட்டார்கள்.

இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் இருந்த போலீசுக்கு தகவல் கொடுக்க, அவர்கள் வந்து மேரியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரின் உடல்நிலை கொஞ்சம் தேறியதும், அவரிடம் போலீசார் விசாரித்ததில், மனநலம் பாதித்த அவரால் நடந்ததை சரியாகக்கூட சொல்ல முடியவில்லை.

ஆனால், அவர் சொன்னதை வைத்து என்ன நடந்தது என்பதை போலீசார் புரிந்துகொண்டார்கள்.

தினமும் இரவில் ஐந்து பேர் மேரியை ஆட்டோவில் அழைத்துச்சென்றிருக்கிறார்கள். காலையில் அரை மயக்கத்தில் அவரை இறக்கிவிட்டு சென்றிருக்கிறார்கள் என்பதை கேட்டு அதிர்ந்தனர் போலீசார்.

மனநலம் பாதித்த பெண்னுக்கு நேர்ந்த இந்த அவலம் அறிந்த போலீசார், அங்கிருக்கும் சிசிடிவி கேமராக்கள் மூலம் தேடி வருகிறார்கள் அந்த மனித மிருகங்களை.

மாவட்ட செய்திகள்

Most Popular

கொரோனா தடுப்பு மருந்து தயாரா? ஆய்வகங்களுக்கு நேரில் செல்கிறார் பிரதமர் மோடி!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆய்வகங்களுக்கு பிரதமர் மோடி இன்று நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.

“குழந்தைகளுக்கு கொடுத்த போண்டாவில் இருந்த பிளேடு” – அதிர்ச்சி அடைந்த சப்- இன்ஸ்பெக்டர்!

நிலக்கோட்டை அருகே குழந்தைக்காக வாங்கிய போண்டாவில் பிளேடு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக...

“பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு” : அமைச்சர் செங்கோட்டையன் புதிய தகவல்!

தமிழகத்தில் பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில்...

“மட்டையான பெண்ணை வேட்டையாடிய நண்பர்கள்”-பர்த்டே பார்ட்டிக்கு போன பெண் மேனேஜர் டேமேஜ் ஆன கதை

ஒரு பெண் ஈவென்ட் மேனேஜர் தன்னுடைய ஆண் நண்பர்களால் மதுவுக்குள் மயக்க மருந்து கலந்து கொடுக்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பலருக்கு பாடமாக அமையும்.
Do NOT follow this link or you will be banned from the site!