குமரியில் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து, உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

 

குமரியில் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து, உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

குமரி

குமரி மாவட்டம் தூத்தூர் ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, வார்டு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய, ஊராட்சி தலைவி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முயன்றதாக கூறப்பகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, 10-க்கும் மேற்பட்ட வார்டு உறுப்பினர் நேற்று காலை போராட்டம் நடத்துவதற்காக ஊராட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.

குமரியில் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து, உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

அப்போது, அலுவலகம் திறக்கப்படாமல் இருந்ததால் ஆத்திரமடைந்த உறுப்பினர்கள், அலுவலக வாயிலில் நின்று ஊராட்சி மன்ற தலைவிக்கு எதிராகவும், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், ஜல் ஜீவன் திட்டத்தை கைவிட்டு தற்போது நடைமுறையில் உள்ள கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமே தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

தொடர்ந்து, நேற்று மாலையில் அலுவலகம் திறக்கப்பட்டதை அடுத்து, உறுப்பினர்கள் அலுவலகத்தின் உள்ளே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நித்திரவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, இந்த விவகாரம் குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று, தீர்வு காண்பதாக உறுதி அளித்தார். அதன் பேரில், வார்டு உறுப்பினர்கள்ள போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்