பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து வாகனங்களை உடைக்கும் போராட்டத்தை நடத்திய கேரள காங்கிரஸ் (எம்)

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து வாகனங்களை உடைக்கும் போராட்டத்தை நடத்திய கேரள காங்கிரஸ் (எம்)

கேரளாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து, கேரள காங்கிரஸ் (எம்) கட்சியினர் நேற்று வாகனங்களை உடைக்கும் போராட்டத்தை நடத்தினர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் நம் நாட்டில் கடந்த சில தினங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிறது. நாட்டின் சில பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ தொட்டு விட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து கடந்த சில தினங்களுக்கு காங்கிரசார் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து வாகனங்களை உடைக்கும் போராட்டத்தை நடத்திய கேரள காங்கிரஸ் (எம்)
டீசல், பெட்ரோல் விலை உயர்வு

இந்நிலையில் கேரளாவில் கேரள காங்கிரஸ் (எம்) கட்சி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று புதுமையான போராட்டம் நடத்தினர். கொல்லம் மாவட்டம் ஆயூர் பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் முன்பாக வாகனத்தை உடைத்து போராட்டத்தை நடத்தினர். ஒரு கார் மற்றும் பைக்கின் பாகங்களை கேரள காங்கிரஸ் (எம்) தொண்டர்கள் தனித்தனியாக உடைத்து எறிந்தனர்.

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து வாகனங்களை உடைக்கும் போராட்டத்தை நடத்திய கேரள காங்கிரஸ் (எம்)
கேரள காங்கிரஸ் (எம்)

இது தொடர்பாக கேரள காங்கிரஸ் (எம்) கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், மக்கள் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே வாகனங்களை அழிக்கும் இந்த போராட்டத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். பெட்ரோல் மற்றும் டீசல் செலவை மக்கள் தாங்க முடியாவிட்டால் வாகனங்களை வைத்திருப்பதன் பயன் என்ன? என்று தெரிவித்தார்.
1979ல் கேரள காங்கிரசில் இருந்து விலகி உருவான கட்சி கேரள காங்கிரஸ் (எம்). இந்த கட்சி தற்போது இடது ஜனநாயக முன்னணி கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.