மாநிலங்களவை உறுப்பினர் பதவி: தமிழில் பதவியேற்ற அ.தி.மு.க எம்.பி-க்கள்!

 

மாநிலங்களவை உறுப்பினர் பதவி: தமிழில் பதவியேற்ற அ.தி.மு.க எம்.பி-க்கள்!

மாநிலங்களவை உறுப்பினர்களா தேர்வு பெற்ற அ.தி.மு.க-வின் தம்பிதுரை, கே.பி.முனுசாமி, த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் இன்று பதவியேற்றனர்.
கடந்த ஏப்ரல் 2ம் தேதியுடன் நாடு முழுக்க உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்தது. தமிழகத்தில் ஆறு எம்.பி-க்களின் பதவிக்காலம் முடியவே தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க சார்பில் மூன்று எம்.பி-க்களும், அ.தி.மு.க சார்பில் இரண்டு எம்.பி-க்களும், அ.தி.மு.க கூட்டணி சார்பில் ஜி.கே.வாசனும் போட்டியின்றி வெற்றி பெற்றனர்.

மாநிலங்களவை உறுப்பினர் பதவி: தமிழில் பதவியேற்ற அ.தி.மு.க எம்.பி-க்கள்!
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி-க்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி இன்று டெல்லியில் நடந்தது. இதில், அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற தம்பிதுரை, கே.பி.முனுசாமி, தா.ம.க தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மாநிலங்களவை உறுப்பினர் பதவி: தமிழில் பதவியேற்ற அ.தி.மு.க எம்.பி-க்கள்!
இதே போல மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, பா.ஜ.க சார்பில் வெற்றி பெற்ற ஜோதிர் ஆதித்திய சிந்தியா, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவர், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன், காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன கார்கே, திக் விஜய் சிங் உள்ளிட்டோர் பதவியேற்றனர். தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ மாநிலங்களவையின் மழைக்கால கூட்டத்தொடரின் போது பதவி ஏற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.