மேகதாது அணை பிரச்சனை : புதுச்சேரி அரசுக்கு எம்.பி.ரவிக்குமார் கோரிக்கை!

 

மேகதாது அணை பிரச்சனை : புதுச்சேரி அரசுக்கு எம்.பி.ரவிக்குமார் கோரிக்கை!

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிக்கும் நிலையில், தமிழக அரசைப்போல புதுச்சேரி அரசும் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டவேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் க.லட்சுமிநாராயணனை சந்தித்து கடிதத்தை ரவிக்குமார்எம்.பி அளித்தார்.

மேகதாது அணை பிரச்சனை : புதுச்சேரி அரசுக்கு எம்.பி.ரவிக்குமார் கோரிக்கை!

புதுச்சேரி மாநிலத்தின் பிரத்தியேகமான புவியியல் சூழல் இங்கு தண்ணீரை சேமித்து வைக்கும் நீர்த்தேக்கம் எதையும் கட்டுவதற்கு உகந்ததாக இல்லை. இங்கு உள்ள நிலம் களிமண் நிலமாக இருப்பதால், நெல்லைத் தவிர வேறு எதையும் சாகுபடி செய்ய முடியாது. புதுச்சேரியில் சாகுபடி செய்யப்படும் மொத்த நிலப்பரப்பு 27 ஆயிரம் ஏக்கர் என்பது நீண்டகாலமாக நிலையானதாக மாறாமல் உள்ளது.

இங்குள்ள விவசாயம் பெரிதும் வடகிழக்கு பருவமழையை நம்பித்தான் உள்ளது. அதுமட்டுமின்றி கடலோரப் பகுதி முழுவதும் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது. எனவே புதுச்சேரி மாநில விவசாயிகள் காவிரி நீரை மட்டுமே நம்பி உள்ளனர்.தற்போது தமிழ்நாட்டில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் கர்நாடகத்திற்கு 67.16 டிஎம்சி நீரை தேக்கி வைக்கும் திறன் கொண்ட அணை ஒன்றை காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவைக்கும், மின் உற்பத்திக்கும் இந்த அணை கட்டப்போவதாக கர்நாடக சொல்வது உண்மை அல்ல. இந்த அணை கட்டப் படாமல் தமிழ்நாட்டுக்கான தண்ணீர் கிடைக்காது என தமிழ்நாடு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தும் கூட ஒன்றிய அரசின் நீர்வளத்துறை திட்ட மதிப்பீட்டு இயக்குனரகம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது .இந்த அனுமதிக்கு தடை விதிக்க கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2018 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேகதாது அணையை தடுப்பதற்காக தமிழ்நாடு அரசு சட்டரீதியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருப்பதோடு அரசியல் ரீதியில் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர கடந்த 12ஆம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி உள்ளது. அதில் மூன்று தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

மேகதாது அணை கட்டப்பட்டால் புதுச்சேரிக்கும் காவிரி நீர் கிடைக்காத நிலை உருவாகும். எனவே புதுச்சேரி அரசும் தமிழ்நாட்டைப் போலவே உடனடியாக இந்த பிரச்சனைகள் விரைந்து செயல்பட வேண்டும் . இல்லாவிட்டால் காரைக்கால் பகுதியில் நடைபெற்று வரும் விவசாயம் முற்றிலுமாக அழியும் நிலை ஏற்படும் . எனவே சட்ட ரீதியாகவும் , அரசியல் ரீதியாகவும் காவிரி நீர் உரிமையை நிலைநாட்டிட புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதற்கான அனைத்து கட்சிகளின் கூட்டத்தை கூட்டி தமிழ்நாடு அரசுடன் இணைந்து புதுச்சேரியின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.