காஷ்மீர் மக்களின் அடையாளத்தை பாதுகாக்க குப்கர் பிரகடனத்திற்கான மக்களின் கூட்டணி உருவாக்கம்.. மெகபூபா முப்தி..

காஷ்மீர் மக்களின் அடையாளத்தை பாதுகாக்க குப்கர் பிரகடனத்திற்கான மக்களின் கூட்டணி உருவாக்கம்.. மெகபூபா முப்தி..

ஜம்மு அண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதற்கு முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், ஜம்மு அண்டு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி உள்பட மொத்தம் 7 கட்சிகள் இணைந்து குப்கர் அறிக்கைக்கான கூட்டணியை அண்மையில் உருவாக்கின.

காஷ்மீர் மக்களின் அடையாளத்தை பாதுகாக்க குப்கர் பிரகடனத்திற்கான மக்களின் கூட்டணி உருவாக்கம்.. மெகபூபா முப்தி..
மெகபூபா முப்தி

ஜம்மு அண்டு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி டிவிட்டரில், 2019 ஆகஸ்ட் முதல் தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள ஜம்மு அண்டு காஷ்மீர் மக்களின் அடையாளத்தைபாதுகாப்பதற்காக மட்டுமே குப்கர் பிரகடனத்திற்க்காக மக்களின் கூட்டணி உருவாக்கப்பட்டது.

காஷ்மீர் மக்களின் அடையாளத்தை பாதுகாக்க குப்கர் பிரகடனத்திற்கான மக்களின் கூட்டணி உருவாக்கம்.. மெகபூபா முப்தி..
பரூக் அப்துல்லா

இது அற்ப தேர்தல் லாபங்களுக்காக அல்லது கட்சி நலன்களுக்காக உருவாக்கப்பட்டது என்று கருதுவது தவறானது. டி.டி.சி. (மாவட்ட மேம்பாட்டு கவுன்சில்) தேர்தல்களில் போட்டியிடுவதை காட்டிலும் போராட எங்களுக்கு ஒரு பெரிய காரணம் உள்ளது என்று பதிவு செய்து இருந்தார். குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணியின் தலைவர் பரூக் அப்துல்லா அண்மையில், எதிர்வரும் டி.டி.சி. தேர்தலில் தங்களது கூட்டணி இணைந்து போட்டியிடும் என்று தெரிவித்தார்.