முஸ்லிம்களை பாகிஸ்தானி, சர்தார்களை காலிஸ்தானி என்று பா.ஜ.க. சொல்கிறது.. மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

முஸ்லிம்களை பாகிஸ்தானி, சர்தார்களை காலிஸ்தானி என்று பா.ஜ.க. சொல்கிறது.. மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

முஸ்லிம்களை பாகிஸ்தானியர்கள் என்றும், சர்தார்களை காலிஸ்தானி என்றும் பா.ஜ.க. அழைக்கிறது என்று மெகபூபா முப்தி குற்றம் சாட்டினார்.

ஜம்மு காஷ்மீரில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, மெகபூபா முப்தி உள்பட முக்கியமான 7 பிராந்திய கட்சிகள் இணைந்து குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணியை (பி.ஏ.ஜி.டி.) உருவாக்கியுள்ளன. இந்த கூட்டணி மாவட்ட கவுன்சில் தேர்தலில் (டி.டி.சி.) இணைந்து போட்டியிடுகிறது. இந்த சூழ்நிலையில் மக்கள் கூட்டணி கூட்டணி மாவட்ட கவுன்சில் தேர்தலில் போட்டியிடுகிறது என்று அறிவித்த உடனே ஜம்மு அண்டு காஷ்மீரில் அடக்குமுறையின் அளவு அதிகரித்துள்ளதாக மெகபூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார்.

முஸ்லிம்களை பாகிஸ்தானி, சர்தார்களை காலிஸ்தானி என்று பா.ஜ.க. சொல்கிறது.. மெகபூபா முப்தி குற்றச்சாட்டு
மெகபூபா முப்தி

மெகபூபா முப்தி இது தொடர்பாக கூறியதாவது: மாவட்ட கவுன்சில் தேர்தலில் நாங்கள் போட்டியிட முடிவு செய்தது முதல் ஜம்மு அண்டு காஷ்மீரில் அடக்குமுறையின் அளவு அதிகரித்துள்ளது. மக்கள் கூட்டணியின் வேட்பாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள், பிரச்சாரத்துக்கு செல்ல அனுமதிக்கவில்லை. பிரச்சாரத்துக்கு அனுமதிக்கவில்லை என்றால் அவர்கள் எப்படி தேர்தலில் போட்டியிடுவார்கள்?

முஸ்லிம்களை பாகிஸ்தானி, சர்தார்களை காலிஸ்தானி என்று பா.ஜ.க. சொல்கிறது.. மெகபூபா முப்தி குற்றச்சாட்டு
குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணி

ஜனநாயகத்துக்கு இடமில்லாத ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க பா.ஜ.க. விரும்புகிறது. அவர்கள் முஸ்லிம்களை பாகிஸ்தானியர்கள் என்றும், சர்தார்களை காலிஸ்தானி என்றும், சமூக ஆர்வலர்களை நகர்புற நக்சல் என்றும், மாணவர்களை துக்தே துக்தே கும்பல் மற்றும் தேச விரோதிகள் என்றும் அழைக்கிறார்கள். எல்லோரும் பயங்கரவாதிகள், தேசவிரோதிகள் என்பதை நான் புரிந்து கொள்ள தவறிவிட்டேன். இந்த நாட்டில் இந்துஸ்தானி யார்? பா.ஜக. தொண்டர்கள் மட்டும்தானா?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.