இப்பம் நேரம் சரியில்லை…. வழிபாட்டு தலங்களை மீண்டும் திறப்பது தொடர்பான உத்தரவை திரும்ப பெற்ற மேகாலயா

கடந்த ஜூன் 8ம் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் மீண்டும் திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. இதனையடுத்து டெல்லி, ஆந்திர பிரதேசம் உள்பட பல மாநிலங்களில் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டன. அதேசமயம் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் மத வழிபாட்டு தலங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயா இம்மாதம் 14ம் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் திறந்து கொள்ளலாம் என அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.

முதல்வர் கான்ராட் கே சங்மா

இந்த சூழ்நிலையில், கிறிஸ்துவர்கள அதிகம் கொண்ட மேகாலயா மாநிலத்தில் திடீரென கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மேகாலயா அரசு மத வழிபாட்டு தலங்களை மீண்டும் திறக்க அனுமதி கொடுத்தது குறித்து யோசித்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் அனைத்து மத தலைவர்களையும் அம்மாநில முதல்வர் கான்ராட் கே சங்மா சந்தித்து வழிபாட்டு தலங்களை மீண்டும் திறப்பது தொடர்பாக ஆலோசனை செய்தார்.

துணை முதல்வர் பிரஸ்டோன் டின்சோங்

அதன்பிறகு ஜூன் 14ம் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் திறக்கலாம் என்ற தனது முந்தைய உத்தரவை மேகாலயா அரசு திரும்ப பெற்றது. இது தொடர்பாக அம்மாநில துணை முதல்வர் பிரஸ்டோன் டின்சோங் கூறுகையில், மாநிலத்தில் கோவிட்-19 பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளித்த முந்தைய உத்தரவை நாங்கள் திரும்ப பெறுகிறோம் என தெரிவித்தார். மேலும் அவர் டிவிட்டரில், இன்று (கடந்த திங்கட்கிழமை) பிற்பகல் பல்வேறு மத அமைப்புகளுடனான ஆலோசனைகளின் அடிப்படையில் மேகாலயாவில் மத வழிபாட்டு தலங்களை மீண்டும் திறப்பதை நிறுத்தி வைக்க அரசு முடிவு செய்துள்ளது. முதலில் ஜூன் 14ம் தேதி முதல் திறக்க முடிவு செய்யப்பட்டது என பதிவு செய்து இருந்தார்.

Most Popular

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை

ஒரே சேலையில் தூக்கிட்டு இளம் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிர்ச்சியை ஏற்படுதியிருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பாஸ்குமார்(19), கள்ளக்குறிச்சி மாவட்டம் நயினார்பாளையம் செம்பாகுறிச்சி கிராமத்தை சேர்ந்த...

கேரளாவில் இன்று 1,298 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்தது

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில்...

இ-பாஸ் நடைமுறை எதற்கு?- முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தொற்று சென்னையில் சற்று குறைந்து வரும் நிலையில், மற்ற மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. ஆரம்ப காலத்தில் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்ததால் லட்சக்கணக்கானோர் சொந்த...

பாஜகவுக்கு தாவுகிறாரா அனிதா ராதாகிருஷ்ணன்?

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களாக பார்த்து பாஜக வலை விரிக்கிறது என்று பேசப்பட்டு வரும் சூழலில் அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் பரவியது. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற வி.பி.துரைசாமி, கு.க.செல்வம்...