மெகா தடுப்பூசி முகாம்… தடுப்பூசி செலுத்திய ஆட்சியர்… 2-ஆம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சர்!

 

மெகா தடுப்பூசி முகாம்… தடுப்பூசி செலுத்திய ஆட்சியர்… 2-ஆம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சர்!

தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் இன்று 526 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. காலை 7 மணிக்கு தடுப்பூசி முகாம்கள் தொடங்கிய நிலையில், பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். காலை 11 மணி நிலவரப்படி கரூ மாவட்டத்தில் 27 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பஞ்சமாதேவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த முகாமினை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மெகா தடுப்பூசி முகாம்… தடுப்பூசி செலுத்திய ஆட்சியர்… 2-ஆம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சர்!

விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஆயிரத்து 67 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. விருதுநகரில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை ஆட்சியர் மேகநாத ரெட்டி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் எம்எல்ஏ சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பொதுமக்கள் தங்களது வீடுகளின் அருகே உள்ள தடுப்பூசி மையங்களின் விபரங்களை virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டு உள்ளது.

மெகா தடுப்பூசி முகாம்… தடுப்பூசி செலுத்திய ஆட்சியர்… 2-ஆம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சர்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 800-க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. இதனையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் ஒப்பதவாடி கிராமத்தில் நடந்த தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானுரெட்டி, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆதி திராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணை செயலாளர் பழனிசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த நிகழ்ச்சியின்போது, மருத்துவரான ஆட்சியர் ஜெயந்திர பானுரெட்டி, பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தினார். இதில், பர்கூர் எம்எல்ஏ மதியழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மெகா தடுப்பூசி முகாம்… தடுப்பூசி செலுத்திய ஆட்சியர்… 2-ஆம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சர்!

திருவாரூர் மாவட்டத்தில் இன்று 633 இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம், முத்துப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலை 7 மணி முதல் முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம், புலிவலம், குடவாசல் வட்டம் மூலங்குடி மற்றும் குடவாசல் பேருந்து நிலையங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மெகா தடுப்பூசி முகாம்… தடுப்பூசி செலுத்திய ஆட்சியர்… 2-ஆம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சர்!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 700 முகாம்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வரும் நிலையில், இதில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. நாமக்கல் மாவட்டம் வெண்ணாந்தூர் ஊராட்சி ஒன்றியம் மசக்காளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த முகாமை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த முகாமில் அமைச்சர் மதிவேந்தன் இரண்டாம் கட்ட தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.