கன்னடர் ரஜினிகாந்த், கிறிஸ்தர் விஜய்! சர்ச்சையை கிளப்பும் மீரா மிதுன்

 

கன்னடர் ரஜினிகாந்த், கிறிஸ்தர் விஜய்! சர்ச்சையை கிளப்பும் மீரா மிதுன்

நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகியோர் தனது பெயரை கெடுக்க முயற்சிக்கின்றனர் என மீராமிதுன் டிவிட்டரில் பதிவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மீராமிதுன். பிக்பாஸ் வீட்டுக்குள்ளே சேரன் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து குறும்படம் மூலம் அசிங்கப்பட்ட வெளியேறிய மீரா மிதுன், வெளியே வந்த பிறகும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். பண மோசடி புகார் உள்ளிட்ட வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றப்பலருக்கு சினிமாவில் நடிக்க பல வாய்ப்புகள் நாடி வந்த நிலையில் மீராமிதுன் மட்டும் தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் பாலிவுட்டுக்கு சென்றுவிட்டதாகவும் தகவல் கசிகின்றன. அவ்வப்போது கவர்ச்சிப் போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு முகம் சுழிக்க வைத்துவந்த மீரா, அண்மைகாலமாக டிவிட்டரில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

Meera Mithun

தமிழ்நாடு தமிழர்களுக்கு இந்துக்களுக்கானது என குறிப்பிட்டு டிவீட் செய்துள்ள மீரா மிதுன் மலையாளிகளும் கிறிஸ்தவர்களும் ஆதிக்கம் செலுத்தி ஒரு தமிழ் பெண்ணுக்கு அநீதி இழைக்கிறார்கள் என கூறியுள்ளார். தமிழ்நாடு அழிந்து கொண்டிருக்கிறது, உங்களை எல்லாம் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ள மீரா மிதுன், கன்னடர் ரஜினிகாந்த், கிறிஸ்தவர் விஜய் ஆகியோர் என் பெயரை கெடுக்க முயற்சி செய்கிறார்கள் என கூறியுள்ளார். சைபர் புல்லியிங் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் என்றும் கடவுள் பார்த்து கொண்டிருக்கிறார் என்றும் மீரா மிதுன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.