• April
    04
    Saturday

Main Area

Main



வரி கட்டியாச்சா உஷார இருந்துகொங்க...  ரெய்டு வருகிறார் மீரா மிதுன்! இந்த லிங்க்குல ஐடிய வாங்கிட்டு சீன் வேற...

மீரா மிதுன்
மீரா மிதுன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றப் பலருக்கு சினிமாவில் நடிக்க பல வாய்ப்புகள் நாடி வந்த நிலையில் மீராமிதுனுக்கு மட்டும் பிரச்னைகள் தான் தொடர்ந்துகொண்டே வந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் பண மோசடி உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்தா மீரா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னும் தனது வாயால் பலரின் பேரின் வெறுப்பை சம்பாதித்துள்ளார். கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஜூலை 27ம் தேதி மீரா மிதுன் வெளியேற்றப்பட்டார்.  அதன்பிறகு, போட்டோ ஷூட், திரைப்பட வாய்ப்புகளில் கவனம் செலுத்தி வந்தார். அத்துடன் மேலும் சில மோசடி வேலைகளிலும் தற்போது ஈடுபட்டுவருகிறார். 

Meera

இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு கமிஷனின் தமிழ்நாட்டிற்கான மாநில இயக்குநர் பதவி வழங்கப்பட்டிருப்பதாகவும், அதற்கான அடையாள அட்டை ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Corruption, the biggest reason for the downfall of most empires and civilization. Some group of people can tolerate corruption as long as their leader champion their religion or race, some will tolerate bribery as long as they champion their own pockets. I’ve lived long enough shouting anti-corruption slogan against the government having no problem bribing a police officer and vote for a leader of their choice as long as these leaders championed their own race. But here comes the twist and buckle up everyone iam now the Director for Chennai Tamilnadu State in Anti-corruption commission ( A.C.C )and no one can hide hereafter and iam watching. To say in Tamil odavum mudiyathu oliyavum mudiyathu. Join hands with me for a corruption free State.

A post shared by Meera Mitun (@meeramitun) on

 

இது சமூக வலைதளத்தில் வைரலானதையடுத்து என்னது... மோசடி தலைவி, சர்ச்சை நாயகிக்கு லஞ்ச ஒழிப்புத்துறையில் வேலையா என அதிர்ச்சியில் மூழ்கி கிடக்கின்றனர். ஆனால் இது முழுக்க முழுக்க பொய் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. சிறிது காலம் சத்தமில்லாமல் கிடந்த மீரா மிதுன் தற்போது மீண்டும் தனது சேட்டையை ஆரம்பித்துள்ளார். 

லஞ்ச ஒழிப்பு மற்றும் குற்றத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான  http://anticorruptionandcrimecontrolcommittee.org/Registration-Form.aspx என்ற பக்கத்தில் நமது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படத்தை கொடுத்து பணம் செலுத்தினால் யார் வேண்டுமானாலும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கான அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம். anti corruption

 

இதற்காக குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும். மாவட்ட வாரியான அடையாள அட்டைக்கு ரூ. 10000, மாநில வாரியான அடையாள அட்டைக்கு ரூ.15000, தேசிய அளவிலான அடையாள அட்டைக்கு ரூ.20000 கட்டணமாக செலுத்த வேண்டும் என்பது விதியாகும்.

meera

ரூ.15000 செலுத்தி தனது நிஜ பெயரான தமிழ் செல்வி பெயரில் ஓர் அடையாள அட்டையை வாங்கி வைத்துக்கொண்டு, தனக்கு லஞ்ச ஒழிப்புத்துறையில் வேலை கிடைத்ததாகவும், இனி யாரும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என உதாரு விட்டுக்கொண்டு அலைகிறார் நம்ம மோசடி நாயகி மீரா மிதுன். இதுதெரியாத பல அப்பாவி மக்கள் மீராமிதுனுக்கு மத்திய அரசில் வேலை கிடைத்ததாக நம்பி ஏமாந்துகொண்டிருக்கின்றனர். 

2018 TopTamilNews. All rights reserved.