‘தல’ன அது அஜித் தான்… தோனியை சீண்டும் மீரா மிதுன்!

 

‘தல’ன அது அஜித் தான்… தோனியை சீண்டும் மீரா மிதுன்!

பிக் பாஸ் பிரபலமான மீரா மிதுன் சமீபகாலமாக நடிகர் விஜய், சூர்யா, நடிகை திரிஷா ,ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவித்து வருகிறார். குறிப்பாக நடிகர் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா மற்றும் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா ஆகியோரைப் பற்றி கடுமையான சொற்களால் விமர்சித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மீரா மிதுனுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர். தற்போது மீரா மிதுன் தோனியை டார்கெட் செய்து ட்வீட் செய்துள்ளார்.

‘தல’ன அது அஜித் தான்… தோனியை சீண்டும் மீரா மிதுன்!

இந்நிலையில் மீரா மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கிரிக்கெட் வீரர் தோனி சென்னை வந்தடைந்ததாக கேள்விப்பட்டேன். இதனை ஊடகங்கள் தல தோனி சென்னை வந்திருக்கிறார் என செய்தியை வெளியிட்டன. ஒன்றை மட்டும் நினைவுப்படுத்த விரும்புகிறேன் ‘தல’-னா அது நடிகர் அஜித் தான் ‘தளபதி’- னா அது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.