• April
    06
    Monday

Main Area

Main



திருமணம் நடந்தது உண்மை தான்: மீரா மிதுன் ஓபன் டாக்!

மீரா மிதுன்
மீரா மிதுன்

சென்னை: திருமணம் குறித்து மீரா மிதுன் முதல் முறையாகப் பேசியுள்ளார். 

பிக் பாஸ் சீசன் 3யில் 16வது போட்டியாளராக நுழைந்தவர் மீரா மிதுன். தேவையில்லாமல் பொய் சொல்வது, மற்றவர்களிடம் விண் வம்பு செய்வது என்று ஹவுஸ் மேட்ஸ் மத்தியில் வெறுப்பை சம்பாதித்தார். அதனாலேயே வந்த நாள் முதல் நாமினேஷன் லிஸ்டில் சிக்கினார். 

அதைத்தொடர்ந்து கடந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து அதிரடியாக வெளியேறினார். இந்த நிலையில் தற்போது இவர் பிரபல ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ளார். அதில், சேரன் மீது அவர் விண் பழிபோட்டது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அவர் கூறியதாவது, 'சேரன் கையும் களவுமாக மாட்டிய பின்பு, நான் பேசியதற்குச் சம்பந்தமே இல்லாமல் ஒரு விஷயத்தை எடுத்து ட்ராமா செய்து விட்டார். அவர் கண்ணில் கண்ணீர் கூட வரவில்லை என கவின் சொன்னார்' என்று கூறினார். 

meera

அதைத்தொடர்ந்து அவரின் திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, 'அது ஒரு சோசியல் மேரேஜ். அம்மா, அப்பா பார்த்து தான் திருமணம் செஞ்சி வெச்சாங்க. ஆனால் அந்த திருமணம் ஒரு நாள் மட்டுமே நீடித்தது. அதை ரெஜிஸ்டர் கூட செய்யவில்லை. இந்திய சட்டப்படி எனக்கு இன்னும் முதல் திருமணம் நடக்கவில்லை. நான் சிங்கள் தான்' என்று கூறியுள்ளார். 
 

2018 TopTamilNews. All rights reserved.