கவலைப்படாதீங்க வடிவேலு சார்… என் படத்துல நடிக்க வாய்ப்பு தருகிறேன்- மீராமிதுன்

 

கவலைப்படாதீங்க வடிவேலு சார்… என் படத்துல நடிக்க வாய்ப்பு தருகிறேன்- மீராமிதுன்

நண்பேன்டா வாட்ஸ்அப் குழுவின் நண்பர்கள் சந்திப்பு அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அதில், “உடம்புல தெம்பு இருக்கு, நடிக்க ஆசை இருக்கு, ஆனால் எனக்கு யாரும் வாய்ப்பு தருவதில்லை. இது பெரிய கொடுமை. நான் மட்டும் 10 ஆண்டுகளாக லாக்டவுனில் இருக்கிறேன்” என வருத்தத்துடன் தெரிவித்திருந்தார். அனைவரையும் எப்போதும் சிரிக்க வைத்த வடிவேலு வருத்தப்படுவதை பார்த்த மக்கள் மிகவும் வருத்தப்பட்டனர்.

கவலைப்படாதீங்க வடிவேலு சார்… என் படத்துல நடிக்க வாய்ப்பு தருகிறேன்- மீராமிதுன்

இந்நிலையில் பிக்பாஸ் பிரபலமான மீரா மிதுன், ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வடிவேலு அண்மையில் பேசிய வீடியோவை பார்த்தேன். வஞ்சத்தில் வீழ்ந்தேனடா என்று வருத்தப்படாதீர்கள். வெற்றி நடைபோடும் ஒரு மனிதரை வஞ்சகமாகவும், மோசடி செய்தும்தான் வீழ்த்துவார்கள். ஆனால் யாரும் யாரையும் ஒதுக்கக்கூடாது என்பதை என் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொண்டேன். உங்களின் தெனாலிராமன் படத்தை பார்த்திருக்கிறேன். உங்களின் பெரிய ரசிகை நான். நீங்கள் ஒரு பெரிய சகாப்தம், எப்பவும் கண் கலங்கக்கூடாது. நான் ஒரு படத்தை தயாரிக்கிறேன். அதில் விருப்பம் இருந்தால் நீங்கள் நடிக்கலாம். உங்களுடன் நான் நடித்தால் மிகவும் பெருமைப்படுவேன்” என தெரிவித்துள்ளார்.