• April
    06
    Monday

Main Area

Main



காருக்குள் திருட்டு தம் அடிக்கும் பிக் பாஸ் மீரா மிதுன்! 

மீரா மிதுன்
மீரா மிதுன்

சென்னை: மீரா மிதுன் தம் அடிக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது. 

பிக்பாஸ் சீசன் 3யில் 16வது போட்டியாளராகப் பங்கேற்றார் மீரா மிதுன். இவர் நுழைந்தது சக போட்டியாளர்களான அபிராமி மற்றும் சாக்ஷி ஆகியோருக்கு பிடிக்கவில்லை. அதுமட்டுமின்றி இவர் மீது பல்வேறு மோசடி புகார்கள் உள்ளதால் பிக்பாஸ் வீட்டிற்குச் சென்று காவல் துறையினர் விசாரித்து வந்தனர். 

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் பலரிடம் பிரச்சனை செய்து வந்த மீரா மிதுன் ஒரு வழியாகக் கடந்த வாரம் மக்கள் மத்தியில் வெறுப்பைச் சம்பாதித்து வெளியேறினார். மேலும் இவர் பல மோசடி வழக்குகளில் ஈடுபட்டுள்ளார் என்றும் மற்றவர்கள் மேல் தேவையில்லாமல் பழி போடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாக இவரின் நெருங்கிய வாட்டாரங்கள் சில பேர் பேட்டியில் ஓப்பானாகக் கூறினர். 

meera

இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டை மறுத்து பேசினார். இந்த நிலையில் தற்போது மீரா புகைபிடிக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. யாருக்கும் தெரியாமல் காரின் உள் அமர்ந்து அவர் புகைபிடிக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். 

முன்னதாக மீரா பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் சமயத்தில் தான் ஒரு தமிழ் பெண் என்று கூறியிருந்தார். தற்போது அதையும், புகைபிடிக்கும் காட்சியையும் ஒப்பிட்டு அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

2018 TopTamilNews. All rights reserved.