kaappan-mobile kaappan-large
  • September
    21
    Saturday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


ஜோவை கொலை செய்ய ரகசியமாக திட்டம் தீட்டிய மீரா மிதுன்: leaked ஆடியோ பதிவு உள்ளே.. 

மீரா மிதுன்
மீரா மிதுன்
Loading...

பிக் பாஸ் சீசன் 3யில் 16வது போட்டியாளர்களாக நுழைந்து பிரபலமானவர் மீரா மிதுன். தொடர்ச்சியாக இவர் செய்த சில செயல் ஹவுஸ் மேட்ஸ் மட்டுமின்றி ரசிகர்களுக்கு எரிச்சல் முட்டும் வகையிலிருந்ததால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். 

 இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி சென்ற நாள் முதல் ஜோ மைக்கேல் என்பவர் இவர் அழகி போட்டி நடத்துவதாகக் கூறி பல பெண்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி அவர் மீது போலீஸ் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று மீரா மிதுனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

இந்த நிலையில் தன் மீது புகார் கொடுத்த ஜோவை பழிவாங்க மீரா திட்டம் தீட்டி தனது நண்பருடன் உரையாடிய ஆடியோ பதிவு வெளியாகியுள்ளது. அதில், 'ஜோ மைக்கேல் கால், கையை உடைத்து ஆறு மாதங்கள் பெட்டில் போட்டுவிடலாமா? அல்லது கொலை செய்து விடலாமா, அப்போது தான் இந்த பிரச்சினைக்கு முடிவு வரும்' என்று பேசியுள்ளார். இந்த ஆடியோ பதிவை கேட்ட ரசிகர்கள் மீரா மிதுனை வசைபாடி வருகின்றனர். 

2018 TopTamilNews. All rights reserved.