பாஜகவில் இணைந்தார் மீரா மிதுன்?

 

பாஜகவில் இணைந்தார் மீரா மிதுன்?

ரஜினி கட்சி தொடங்குவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை என நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.

தமிழில் தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மீராமிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மீரா மிதுன், நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். பண மோசடி புகார் உள்ளிட்ட வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றப்பலருக்கு சினிமாவில் நடிக்க பல வாய்ப்புகள் நாடி வந்த நிலையில் மீராமிதுன் மட்டும் தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் குறித்து அவதூறு பரப்பிவந்தார். அதுமட்டுமின்றி அவ்வப்போது கவர்ச்சிப் போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டுவந்ததால் நெட்டிசன்கள் அவரை வசைப்பாடி வந்தனர். அதனால் மீரா மிதுன் என இருந்த தனது ட்விட்டர் பக்கத்தை தனது உண்மையான பெயரான தமிழ் செல்வி மணி என மாற்றிவைத்துள்ளார்.

பாஜகவில் இணைந்தார் மீரா மிதுன்?

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை மீரா மிதுன், “நான் ஒரு தேசிய கட்சியில் இணைந்திருக்கிறேன். விரைவில் அதற்கான அறிவிப்பை அக்கட்சி நிர்வாகிகள் வெளியிடுவார்கள். ரஜினி கட்சி தொடங்குவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. நடிகராக ரஜினியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் படம் நடிக்க வாய்ப்பு வந்து கைவிட்டு போனதால் வருத்தப்படுகிறேன்” எனக் கூறினார். மீரா மிதுன் கூறிய தேசிய கட்சி பாஜக என சினிமா வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.