• April
    03
    Friday

Main Area

Main



பாரில் பீர் குடித்து மீரா மிதுன் செய்த அட்டகாசம்! வைரல் வீடியோ 

மீரா மிதுன்
மீரா மிதுன்

சென்னை: மீரா மிதுன் பாரில் பீர் குடிக்கும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16வது போட்டியாளராக நுழைந்தவர் மீரா மிதுன். அவர் வந்தது அபிராமி மற்றும் சாக்ஷிக்குப் பிடிக்காத காரணத்தினால், இருவரும் சேர்ந்து அவரை ஒதுக்க ஆரம்பித்தனர். அதுமட்டுமின்றி மற்றவர்களைக் குறை சொல்வது, விண் வம்பு இழுப்பது போன்ற செயல்களால் மக்கள் மத்தியில் வெறுப்பைச் சம்பாதித்து பாதியில் வெளியேறினார்.

இந்த நிலையில் நிகழ்ச்சியிலிருந்து வெளியான சில நாட்களுக்குள் அவர் தனது ஆண் நண்பருடன் அரைகுறை உடையில் மோசமாக நடனமாடி இருந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அந்த சர்ச்சை அடங்குவதாரகள் மீராவின் அடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. 

அதில் மீரா தனது நண்பர்களுடன் பியர் குடித்துக் கொண்டே ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, ‘தமிழ்ப் பெண்ணாக இருந்துகொண்டு பியர் குடிக்கலாமா ?’ என்ற கேள்விக்கு ‘ ஏன்யா இப்படி எல்லாத்துக்கும் தமிழ்ப் பொண்ண இழுக்கிறீங்க… இது வெறும் பியர் தான்… அதுவும் பார்லியால் செய்யப்பட்டது’ என்றார். 

தொடர்ந்து பேசிய அவர் பிக்பாஸ் வீட்டில் ஏன் எல்லோரிடமும் சண்டை போட்டீர்கள்? என்ற கேள்விக்கு, 'நான் யாரிடமும் சண்டை போடவில்லை, எல்லோரும்தான் என்னிடம் சண்டை போட்டார்கள். நான் அமைதியாகத்தான் இருந்தேன்' என்று கூறியுள்ளார். அந்த விடியோவை பார்த்த நெட்டிசன்கள் மீராவிற்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர். 

2018 TopTamilNews. All rights reserved.