மருத்துவ குணம் கொண்ட பீர்க்கங்காய்: வீடு தேடி வந்து வாங்குவதால் விவசாயிகள்மகிழ்ச்சி

மருத்துவ குணம் கொண்ட பீர்க்கங்காய்: வீடு தேடி வந்து வாங்குவதால் விவசாயிகள்மகிழ்ச்சி

அதிக லாபம் தரும் பீக்கங்காய் ரசாயன உரம் இன்றி இயற்கையான முறையில் சாகுபடி செய்வதால் வீடு தேடி வந்து மருத்துவ குணம் கொண்ட பீர்க்கங்காயை வாங்கி செல்வதாக விவசாயி மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.

மருத்துவ குணம் கொண்ட பீர்க்கங்காய்: வீடு தேடி வந்து வாங்குவதால் விவசாயிகள்மகிழ்ச்சி

நாகப்பட்டினம் மாவட்டம் பிரதம ராமபுரம், பூவைத் தேடி, விழுந்தமாவடி, பறவை, வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் இயற்கையான முறையில் ரசாயன உரம் இன்றி பீர்க்கங்காய் சாகுபடி செய்து வருகிறார் இயற்கை விவசாயி ராஜா.

மருத்துவ குணம் மிக்க பயிரான பீர்க்கங்காய் சாகுபடி பயிரிட்ட 45 நாட்களிலிருந்து பலன் தர ஆரம்பிப்பதாக கூறும் விவசாயி ராஜா, மூன்று மாதம் வரை தொடர்ந்து பீர்க்கங்காய் பலன்தரும் எனவும் இயற்கையான முறையில் சாகுபடி செய்வதால் அருகில் உள்ள கிராம மக்கள் வீடு தேடி வந்து பீர்க்கங்காய் வாங்கி செல்வதாகவும் எஞ்சிய பீர்க்கங்காய் அருகில் உள்ள பறவை சந்தையில் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுவதாகவும் விவசாயிகள் குர்ஆன் காரணத்தினால் 45 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்த பீர்க்கங்காய் தற்போது 15 ரூபாயிலிருந்து முப்பது ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தார்.

மருத்துவ குணம் கொண்ட பீர்க்கங்காய்: வீடு தேடி வந்து வாங்குவதால் விவசாயிகள்மகிழ்ச்சி

மேலும் அதிக மருத்துவ குணம் கொண்ட நாட்டு காய்கறி என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பார்கள் என்கிறார். பீர்க்கங்காய் செடி அதிகம் பறவைகள் கொத்தி உண்பதால் பறவைகளிடம் இருந்து பாதுகாக்க கண்ணாடி பாட்டில்களை ஒன்றோடு ஒன்று உரசும் படி தொங்கவிடப்பட்டால் அதன் சத்தத்தை கேட்டு பறவைகள் ஓடிவிடும் என்கிறார்.