எந்த காலத்திலும் கை கொடுக்கும் மருத்துவக் காப்பீடு !

 

எந்த காலத்திலும் கை கொடுக்கும் மருத்துவக் காப்பீடு !

கொரோனா காலத்தில் மருத்துவமனை செல்வது குறைந்திருந்தாலும், எந்த காலத்திலும் மருத்துவமனை செலவுகள் குறையப்போவதில்லை. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் சில தனியார் மருத்துவமனைகள் லட்சக் கணக்கில் கட்டணங்களை வசூலித்ததும் அறிந்ததுதான்.

இதுபோன்ற, எதிர்பாராத நேரங்களில் மருத்துவச் செலவுகளுக்கு கை கொடுப்பது காப்பீடுகள். அவசர காலங்களில் , அதிகபடியாக மருத்துவ செலவுகளுக்கு ரொக்கப்பணமாக சேர்த்து வைப்பதைவிட
மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகும். குறைந்த செலவில் குடும்பத்தினர் அனைவருக்குமான மருத்துவ செலவுகளை காப்பீடு மூலம் சமாளிக்கலாம்.

எந்த காலத்திலும் கை கொடுக்கும் மருத்துவக் காப்பீடு !

மருத்துவ காப்பீடு எப்படி எடுப்பது

பொதுவான மருத்துவ காப்பீட்டில், குடும்பத்தினர் அனைவருக்குமாக ஒரே காப்பீடாக எடுத்துக் கொள்ளலாம். கணவன், மனைவி, குழந்தைகள், பெற்றோர் என அனைவரையும் உள்ளடக்கி காப்பீடு எடுக்கலாம். பெற்றோர் வயதானவர்கள் என்றால், அவர்களுக்கு அடிக்கடி மருத்துவ செலவுகள் இருக்கும், எனவே அவர்களுக்கு மட்டும் தனியாக காப்பீடு எடுக்காலம்.

குழந்தை பிறந்த உடன் பெற்றோரின் மருத்துவ காப்பீட்டில் குழந்தை பெயரைச் சேர்த்து விட வேண்டும். பிரசவ செலவுகளை மருத்துவ காப்பீட்டில் செய்வதுபோல, பிறந்த குழந்தைக்கு பிறப்பு குறைபாடுகள் இருந்தால், அதற்கான செலவுகளையும் பாலிசி மூலம் செய்யலாம். குழந்தைக்கான தடுப்பூசி சார்ந்த மருத்துவ செலவுகளையும் காப்பீடு மூலம் செய்யலாம். பல மருத்துவ காப்பீட்டு பாலிசிகளில் குழந்தை பிறந்தவுடன் சேர்க்கக் கூடிய வசதிகள் இருக்கின்றன.

எந்த காலத்திலும் கை கொடுக்கும் மருத்துவக் காப்பீடு !

உண்மை விவரங்கள் அளிக்க வேண்டும்

மருத்துவக் காப்பீடு எடுக்கும்போது , நமது உடல் நலம் குறித்த அனைத்து உண்மை விவரங்களையும் அளிக்க வேண்டும். புகைப்பிடித்தல், மதுப்பழக்கம் ஆகியவற்றை மறைக்ககூடாது. மரபு நோய்கள் இருந்து அதற்காக ஏற்கெனவே மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தால் அதைக் குறிப்பிட வேண்டும்.

மரபு நோய்கள், சர்க்கரை, நீரிழிவு என நமக்கு ஏற்கனவே இருந்துவரும் நோய்களும் மருத்துவ காப்பீட்டில் செலவு செய்யலாம். அந்த வகை காப்பீடுகளில் பிரீமியத்தொகை அதிகமாக இருக்கும்.
முக்கியமாக பாலிசி எடுப்பதற்கு முன்பே நமக்கு இருந்து சில நோய்கள், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் புற்றுநோய்கள், நீண்ட காலத்திற்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறக்கூடிய நோய்கள் இருந்தால் அது குறித்த விவரங்களை மறைக்கக் கூடாது. காப்பீடு பாலிசிகளில் உண்மை விவரங்களை மறைத்தால், செய்த செலவுகளை க்ளைம் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.

எந்த காலத்திலும் கை கொடுக்கும் மருத்துவக் காப்பீடு !

பாலிசி எவ்வளவு இருக்கும்?

எந்த பாலிசி எடுத்தாலும், அதற்கு முன் மருத்துவ பரிசோதனைகள் நடைபெறுவதுடன், அதன் அடிப்படையில் பாலிசி பிரீமியத் தொகை முடிவு செய்யப்படும். பாலிசி எடுப்பதற்கு முன் காப்பீடு நிறுவனத்திடம் சில விஷயங்களை தெளிவுபடுத்திக் கொள்வதும் அவசியம்.

சில பாலிசிகள் மருத்துவ செலவுகளை மட்டும் ஏற்பதாக இருக்கும். சில பாலிசிகள் மருத்துவமனையில் தங்கும் கட்டணங்களையும் கவர் செய்யும். சில பாலிசிகளில் மருத்துவமனையில் தங்கும் கட்டணங்ளில் குறிப்பிட்ட வரம்பு வைத்திருப்பார்கள். எனவே நமது தேவை என்ன என்பதை அறிந்து அதை தேர்வு செய்யலாம்.

சில பாலிசிகளில் மருத்துவச் செலவுகளை நாம் செய்துவிட்டு, பின்னர் ரசீதுகளை காட்டி க்ளைம் செய்து கொள்ளலாம். அப்படி க்ளைம் செய்ய எத்தனை நாள் ஆகும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
சில முக்கியமான மருத்துவ சேவைகள், குறிப்பிட்ட மருத்துவமனைகளில் மட்டுமே சிறப்பாக கிடைக்கும். அந்த மருத்துவமனைகளுடன் காப்பீடு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் உள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் வசிக்கும் நகரத்தில் உள்ள முக்கிய மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் உள்ளதா எனவும் விசாரித்துக் கொள்ளவும்.

எந்த காலத்திலும் கை கொடுக்கும் மருத்துவக் காப்பீடு !

மருத்துவ காப்பீடு நம் குடும்பத்தின் பாதுகாப்பு அரண் என்பதை உணர்ந்தால் நல்லது என்பதே காலம் உணர்த்தும் பாடம்!

அ.ஷாலினி