ஈரோட்டில் குடியிருப்பு பகுதியில் வீசப்பட்ட மருத்துவக் கழிவுகள்… பொதுமக்கள் அவதி…

 

ஈரோட்டில் குடியிருப்பு பகுதியில் வீசப்பட்ட மருத்துவக் கழிவுகள்… பொதுமக்கள் அவதி…

ஈரோடு

ஈரோட்டில் குடியிருப்பு பகுதியில் மருத்துவக் கழிவுகளை வீசிச் சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தின் மையப் பகுதியில் காரை வாய்க்கால் கரையோர பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கரையின் மறுபுறத்தில் மர்மநபர்கள் அவ்வப்போது குப்பைகள், மது பாட்டில்கள் உள்ளிவற்றை வீசி செல்வதாக கூறப்படுகிறது.

ஈரோட்டில் குடியிருப்பு பகுதியில் வீசப்பட்ட மருத்துவக் கழிவுகள்… பொதுமக்கள் அவதி…

இந்த நிலையில், நேற்று ஆள் நடமாட்டம் இல்லாத சமயத்தில் மர்மநபர்கள் சிலர், காலாவதியான மருந்து, மாத்திரைகளை வீசி சென்றுள்ளனர். இவற்றில், சில மாத்திரைகளை தீ வைத்தும் எரித்து உள்ளனர். இதனால் ஏற்பட்ட நச்சு புகையின் காரணமாக அந்த பகுதி மக்கள் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், அந்த பகுதியில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் இருக்கும் நிலையில், இதுபோன்ற சம்பவங்களால் குழந்தைகள், கால்நடைகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக மக்கள் வேதனை தெரிவித்தனர். எனவே, இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.