நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்

 

நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்

சென்னை

பூந்தமல்லி அருகே தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால், அப்பகுதியில் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். சென்னையை அடுத்த பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சேகரிக்கப்படும் மருத்துவக்கழிவுகளை, செம்பரம்பாக்கம் அருகே பூந்தமல்லி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் இரவுநேரங்களில் கொட்டி வருகின்றனர். இதனால் சாலையின் ஓரத்தில் மருத்துவக்கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கும் நிலையில், அதில் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பிபிஇ கிட், முக கவசம் உள்ளிட்டவை திறந்தவெளியில் வீசப்பட்டு உள்ளது.

நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்

இதனால் அப்பகுதியில் கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும், குப்பைமேடுகளில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் மருத்துவக் கழிவுகளை சாலையில் கொண்டுவந்து போடுவதால், வாகன ஓட்டிகளும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, மருத்துவக்கழிவுகளை முறையாக அகற்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.