குழந்தையில்லாத பெண்களே !இந்த பிரச்சினைய சரி பண்ணிட்டா ,அடுத்த மாசமே நீங்க அம்மாதான் .

 

குழந்தையில்லாத பெண்களே !இந்த பிரச்சினைய சரி பண்ணிட்டா ,அடுத்த மாசமே நீங்க அம்மாதான் .

பெண்ணுக்குத் திருமணம் ஆகிவிட்டாலே அடுத்த மூன்று மாதங்களில் உறவினர்கள் எல்லோரும் கேட்கும் விஷயம் இதுவாகத்தான் இருக்கும். ஏதாவது விசேஷம் உண்டா என்று தான். இப்படி தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்பது நிறைய பேரை எரிச்சலடையச் செய்யும்.

குழந்தையில்லாத பெண்களே !இந்த பிரச்சினைய சரி பண்ணிட்டா ,அடுத்த மாசமே நீங்க அம்மாதான் .

பொதுவாக குழந்தை உண்டாவது, கர்ப்பமாவது என்பது மிக எளிதான விஷயம், அதற்கு உடல் ரீதியான ஆண், பெண் சேர்க்கை மட்டுமே போதுமானது என்று நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கு ஆரோக்கிய ரீதியாக நிறைய மெனக்கடல்கள் செய்ய வேண்டியிருக்கிறது.

இன்றைய மாறிவிட்ட வாழ்க்கைச் சூழலில் குழந்தை உண்டாவது என்பது அவ்வளவு எளிதான விஷயமெல்லாம் கிடையாது. அதற்கென ஆரோக்கியமான விஷயங்களைக் கருத்தில் கொண்டு தயார் செய்ய வேண்டியிருக்கிறது.

ஹைப்பர் தைராய்டிசம் இருந்தால், கருத்தரிப்பது மிகவும் கஷ்டம். அதிலும் ஹைப்போ தைராய்டிசம் இருந்தால், தைராய்டு ஹார்மோன்களின் அளவு சரியாக கட்டுப்பாட்டில் இருக்கும் வரை கருத்தரிப்பதற்கு முயலாமல் இருப்பது நல்லது. ஏனெனில் அந்த பிரச்சனையுடன் குழந்தையை பெற்றெடுக்க முயன்றால், பின் அது குழந்தையின் மனநிலையை பாதிப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அதிலும் ஹைப்பர் இருந்தால், கருத்தரிப்பதே முடியாத ஒரு ஒன்றாகிவிடும்.

தைராய்டு முற்றிய நிலையில் இருந்தால், உடல் எடையானது அளவுக்கு அதிகமாக திடீரென்று நினைக்க முடியாத அளவில் அதிகரிக்கும். மேலும் உடல் மிகவும் சோர்வுடனும். குழந்தை பிறப்பதில் பிரச்சனையும் ஏற்படும். சரி, ஹைப்பர் தைராய்டிசம் இருந்தால், என்ன அறிகுறிகள் வெளிப்படும் என்பதை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உடனே அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு சரிசெய்யுங்கள்

எடை அதிகரித்தல்

தைராய்டு ஹார்மோன் உடலில் அளவுக்கு அதிகமாக இருந்தால், உடல் பலூன் போன்று ஊதிவிடும். அவ்வாறு திடீரென்று உடல் எடையானது அதிகரித்தால், அது ஹைப்பர் தைராய்டு இருப்பதற்கான முக்கிய அறிகுறியாகும்.

சோர்வு

தைராய்டு சுரப்பியானது சரியாக வேலை செய்யாமல் இருந்தால், உடல் மிகவும் சோர்வுடன் இருக்கும். அத்தகைய சோர்வானது நன்கு வித்தியாசத்துடன் தெரியும்.

மாதவிடாயில் பிரச்சனை

பெண்களுக்கு தைராய்டு அதிகமாக இருந்தால், அது தைராக்ஸின் உற்பத்தியை அதிகரித்து, மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான இரத்தப்போக்கை உண்டாக்கும். மேலும் மாதவிடாய் சுழற்சியானது சரியாக 28 நாட்களுக்கு ஒரு முறை நடைபெறாமல், அதற்கு முன்பாகவே சீக்கிரம் சீக்கிரமாக நடைபெறும்.

அதிக கொலஸ்ட்ரால்

தைராய்டு அதிகமாக இருந்தால், அது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை அதிகமாக இருக்கும். அவ்வாறு கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது என்று அதனைக் கட்டுப்படுத்த டயட் மற்றும் மருந்துகள் போன்றவற்றை மேற்கொண்டாலும், குறையாமல் இருந்தால், அது ஹைப்பர் தைராய்டிசத்திற்கான அறிகுறியாகும்.

மலச்சிக்கல்

ஹைப்பர் தைராய்டிசம் இருந்தால், குடலியக்கம் சீராக செயல்படாமல், மலச்சிக்கல் பிரச்சனையை உண்டாக்கும்.

மூட்டு வலிகள்

மூட்டு வலி மற்றும் கடுமையான உடல் வலி போன்றவையும் தைராய்டு என்பதற்கான அறிகுறிகள் தான். மேலும் எந்த ஒரு செயலை செய்தாலும், அதைச் செய்வது மெதுவாகவும், மந்தமாகவும் இருக்கும்.

கூந்தல் உதிர்தல்

அளவுக்கு அதிகமான கூந்தல் உதிர்தலும், தைராய்டு முற்றியுள்ளது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று. சில சமயங்களில் அவை வழுக்கையையும் உண்டாக்கும்.

பலவீனமான தசைகள்

தைராய்டு ஹார்மோன்கள் உடலில் அதிகமாக இருந்தால், அவை தசைகளில் பிடிப்புக்கள் ஏற்படுவதோடு, ஆங்காங்கு வலிகளையும் உண்டாக்கும். இத்தகைய வலிகள் கடுமையாக இருக்கும்.