காப்பி அடித்தபோது சிக்கியதால் கல்லூரியில் 3வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை

 

காப்பி அடித்தபோது சிக்கியதால் கல்லூரியில் 3வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சவீதா மருத்துவக் கல்லூரியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கல்லூரி மாணவர்களை உலுக்கி எடுத்திருக்கிறது.

காப்பி அடித்தபோது சிக்கியதால் கல்லூரியில் 3வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை

சென்னை அம்பத்தூர் அடுத்த புதூர் சிவசண்முகம் சாலையை சேர்ந்தவர் ராஜ் என்பவரின் மகள் சோனாலி(20). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியிலிருந்த சவீதா மருத்துவக் கல்லூரியில் சுகாதார அறிவியல் படிப்பில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.

கல்லூரியில் தற்போது தேர்வு நடைபெற்று வருகிறது. கடந்த புதன்கிழமை அன்று நடைபெற்ற தேர்வில் சோனாலி செல்போனை வைத்து காப்பி அடித்துள்ளார். ஆசிரியை கையும் களவுமாக பிடித்த எடுத்து சோனாலியின் தந்தை ராஜ்க்கு தகவல் சொல்லி அவர் கல்லூரிக்கு வரவழைக்கப்பட்டு கண்டித்துள்ளார். இனிமேல் இதுபோல் நடக்காது என்ற மாணவி உறுதியாக கடிதம் எழுதிக் கொடுத்த தன் பேரில் மீண்டும் நேற்று நேற்றைய தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காப்பி அடித்தபோது சிக்கியதால் கல்லூரியில் 3வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை

கல்லூரியின் ஏழாவது மாடியில் தேர்வு நடைபெற்றது. அப்போதும் செல்போனை வைத்து சோனாலி காப்பி அடித்து கொண்டிருந்திருக்கிறார். இதில் ஆத்திரமான ஆசிரியை செல்போனையும் பேப்பரையும் பிடுங்கிவிட்டு மாணவியை தேர்வு எழுத சொல்லாமல் தனியாக அமரும்படி உட்கார வைத்திருக்கிறார்.

கையும் களவுமாக பிடிபட்டதால் மீண்டும் தந்தையிடம் புகார் செல்லுமே என்று நினைத்த மாணவி சோனாலி மன உளைச்சலில் இருந்திருக்கிறார். அப்போது அவர் ஏழாவது மாடியில் இருந்து திடீரென்று மூணாவது மாடிக்கு இறங்கி வந்திருக்கிறார். மூணாவது மாடியில் இருந்து அவர் கீழே கொடுத்திருக்கிறார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்திருக்கிறார்.

தகவல் அறிந்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளார்.

மேற்கொண்டு மாணவியின் மரணம் குறித்து கல்லூரியில் விசாரணை நடத்தி வருகின்றார்.