வறுமையிலிருந்த மெடிக்கல் ஓனர் -வசதியாயிருந்த டாக்டர் -அடுத்து கொரானாவால் நடந்த கொடுமை

வறுமையிலிருந்த மெடிக்கல் ஓனர் -வசதியாயிருந்த டாக்டர் -அடுத்து கொரானாவால் நடந்த கொடுமை

ஒரு மெடிக்கல் உரிமையாளர் டாக்டரின் வீட்டில் கொள்ளையடிக்க போன போது பிடிபட்டார்

வறுமையிலிருந்த மெடிக்கல் ஓனர் -வசதியாயிருந்த டாக்டர் -அடுத்து கொரானாவால் நடந்த கொடுமை

மகாராஷ்டிராவின் மும்பையின் ஜோகேஸ்வரி (கிழக்கு) பகுதியில் வசிக்கும்  விக்ரம் யாதவ் (33) டாக்டர் ராஜேஷ் குமாரின் கிளினிக் அருகே ஒரு மருந்து  கடையை நடத்தி வருகிறார். கொரானா தொற்றுநோயால் அமலிலிருந்த ஊரடங்கின்  போது, ​​யாதவ் ரூ .20 லட்சம்ரூபாய் கடன் வாங்கினார் . இந்த நிதி நெருக்கடி காரணமாக, அவர் தனது மகனின் பள்ளி கட்டணத்தை கூட செலுத்த முடியவில்லை, எனவே பள்ளி, அவரது மகனை  பள்ளியில்  இருந்து நீக்கியது.

அதன் காரணமாக அந்த யாதவ் தன்னோடு அவரின் நண்பர்கள் சிலரை கூட்டாக சேர்த்து கொண்டு அவரின் மெடிக்களுக்கு பக்கத்திலிருக்கும் டாகடர் ராஜேஷ் குமார் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டார்

அதனால்  யாதவ் மற்றும் கல்லூரி  மாணவர் ராஜேஷ் யாதவ் (18) மற்றும்  வடிவமைப்பாளரான அஜய் யாதவ் (32) ஆகியோருடன்  வியாழக்கிழமை பிற்பகல் 1:30 மணியளவில், டாக்டரின் வீட்டிற்கு சென்றனர் அப்போது டாக்டரின் மனைவி பிளாட்டில் தனியாக இருந்தபோது, ​​ராஜேஷ் மற்றும் அஜய் ஆகியோர் கூரியர் டெலிவரி நபர் போல் வேடமிட்டு கதவை தட்டினார்கள் .பிறகு கதவை திறந்த டாக்டரின் மனைவியை தாக்கி விட்டு வீட்டிலிருந்த நகைகளை எடுக்க போனார்கள் .

அதன் பிறகு அந்த பெண் கத்தி கூச்சல் போட்டதும், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தார்கள்.அதன் பிறகு அவர்களை பிடித்து விசாரித்த போது ,இது அந்த மெடிக்கல்காரர் யாதவின் ஏற்பாடு என்று கண்டறிந்தனர் .பிறகு போலீஸ் வரவைக்கப்பட்டு அவர்களிடம் இந்த நபர்களை ஒப்படடைத்தனர் .

வறுமையிலிருந்த மெடிக்கல் ஓனர் -வசதியாயிருந்த டாக்டர் -அடுத்து கொரானாவால் நடந்த கொடுமை